சங்கீதம் 1:6
“கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்.”
அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்:
பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். எபிரேய மொழியில் இன்னும் தெளிவாக, “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்துகொண்டிருக்கிறார்” என்று இருக்கிறது. “அவர் தொடர்ந்து அவர்களுடைய வழியை காண்கிறவராக இருக்கிறார். ஒருவேளை சில நேரங்களில் அந்த வழி மூடு பனியாலும் இருளாலும் நிறைந்திருந்தாலும், ஆண்டவர் அதை அறிந்திருக்கிறார்” (ஸ்பர்ஜன்). அறிந்திருக்கிறார் என்றால் உன்பேரில் அவர் மிக நெருக்கமாகவும், அன்பாகவும், இருக்கிறார் என்று பொருள். உனக்கும் ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவு சரியான இருக்கிறது என்று பொருள். நீதிமான்களின் வழி என்பது தெய்வபக்தியான மனிதனுடைய வழி. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருக்கிறவனுடைய வாழ்க்கைதான் ஆசீர்வாதமாக இருக்கும். அவன்தான் பாக்கியவான். (வசனங்கள் 1-2)
ஆ. துன்மார்க்கனுடைய வழியோ அழியும்:
தெய்வபக்தியற்ற ஒரு துன்மார்க்கனுடைய வழி எப்படி இருக்குமென்றால் அக்கிரமம் நிறைந்ததாகவும், அழிவுக்கே நேரே அணிவகுத்துச் செல்லுகிறதாகவும் இருக்கும். அக்கிரமக்காரனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால், அவன் தேவனுடைய கட்டளைகளை தள்ளுகிறவனாகவும், மீறுகிறவனாகவும் இருக்கிறான். அவனுடைய அந்த விசாலமான வழி, அந்த வழி அவனுக்கு கொடுக்கும் அவன் தற்காலிகமாக சௌகரியமாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் கடைசியில் துன்மார்க்கர்களுடைய முடிவு அழிவு. அதைத்தான் மத்தேயு 7:23இல் வாசிக்கிறோம், அங்கே இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிறம செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.”
நீதிமான் என்பவன் மன்னிக்கட்ட மனுஷன்.
சங்கீதம் 32:1-2 சொல்லுகிறது,
“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,
எவனுடைய பாவம் மூடப்பட்டதோ,
அவன் பாக்கியவான்.
எவனுடைய அக்கிரமத்தைக்
கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ,
எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ,
அவன் பாக்கியவான்.”
No Comments