சங்கீதம் 139

இந்த சங்கீதத்தை தாவீது ஜெப சிந்தனையோடு எழுதியிருக்கிறார். இதில் அவர் தேவனின் சர்வ ஞானத்தையும், தேவனின் எங்குமிருத்தலையும் என்ற குணாதிசயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் எல்லாம் அறிந்தவர் அதேவேளையில் எங்கும்-இருப்பவர். இந்த சங்கீதத்தில் வாசிக்கும் போது தேவன் தான் படைத்த ஒவ்வொன்றையும் மிக அருகில் இருந்து அறிந்தவர் என்று கற்றுத்தருகிறது.

  1. தேவன் நம்மை மிக நெருக்கமாக அறிந்தவர் என்பதை போதிக்கிறது

சங்கீதம் 139:1, 3 வசனங்கள் தேவன் நம் பழக்கங்களையும், செயல்களையும் அறிந்தவர் என்று கூறுகிறது.

சங்கீதம் 139:2- தேவன் நம் சிந்தனைகளை அறிந்தவர் என்று கூறுகிறது.

சங்கீதம் 139:7-10 வசனங்கள் தேவன் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை அறிந்தவர் என்று கூறுகிறது.

  1. தேவன் நம்மை ஓர் நோக்கத்திற்காக உண்டாக்கினார் என்பதை போதிக்கிறது.

சங்கீதம் 139:14 – நான் ஒரு படைப்பு, நான் எப்படி உருவானேன் என்று கூறுகிறது.

மனிதன் படைக்கப்பட்டதே தேவனை ஆராதிக்க, அவரை அறிய அவரை விசுவாசித்து, பின்பற்ற வேண்டும் என்பதற்காக தான். இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவரின் சிலுவை மரணத்தையும் உயிர்தெழுதலையும் விசுவாசிக்க வேண்டும், அவர் மூலமாய் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

  1. தேவன் ஆளுகிறவர் என்று சங்கீதம் 139:16 போதிக்கிறது.

நாம் ஆராதிக்கிறவர் அனைத்தையும் ஒவ்வொரு தனி மனிதனையும் காண்கிறவர், ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்நாளை அறிந்தவர். தேவனுடைய திட்டம் எதுவுமே மாறாது. அவருக்கு இந்த உலகில் நிகழும் அநீதி, அக்கிரமம், அநியாயம் உன் வாழ்வில் நடந்தது, நடந்துக்கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் தேவனுடைய சித்தமில்லாமல் நிகழாது. சங்கீதம் 135:6, 115:3. இதை வாசிக்கும் போது தேவன் ஆளுகிறார் அவரின் சித்தமில்லாமல் இந்த உலகில் எதுவும் நிகழாது.

  1. தேவன் உன் அருகில் இருக்கிறார் என்று போதிக்கிறது. சங்கீதம் 139:7 “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?”

பிசாசு நமது எதிரி நமக்கு சொல்வது உனக்கு யாருமில்லை. நீ தனி ஆள் என்று. ஒருவேளை மருத்துவமனையில், பிரச்சனையில், யாவராலும் கைவிடப்படும் நிலையில் இருக்கிறாய் என்ற உணர்வை கொண்டுவருவான். அப்படிப்பட்ட நிலையில் நீ பயப்பட அவசியமில்லை. தாவீது இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த நபர் கூறுகிறார். அனைத்து இடங்களிலும் தேவன் இருக்கிறார். தேவன் இல்லாத இடம் ஏதுமில்லை என்பதை அறிந்துக்கொள். அவர் உன் அருகில் இருக்கிறார்.

  1. தேவன் நியாதிபதி என்று சங்கீதம் 139:19-22 போதிக்கிறது. தேவன் பாவிகளை நியாயம் தீர்க்கிரவராய் இருக்கிறார். மனந்திரும்பாமல் தன் பாவத்தை உணராமல் தொடர்ந்து சுவிசேஷத்திற்கு செவிகொடாதவர்களை தேவன் நியாயம்தீர்க்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் பாவிகள் மீது சினம்கொள்ளுகிற தேவன். பாவிகளை நரகத்தில் தள்ளுவார்.
  2. ஜெபத்தை குறித்து சங்கீதம் 139:23-24 போதிக்கிறது. பயத்திலும், திகிலிலும் வாழ்வும், எதிர்காலம் எப்படியோ, மரணபடுக்கையில், பிரச்சனையில் உள்ளவர்களுக்கு தாவீது தேவனின் சர்வஏகாதிபத்தியத்தையும் அவரின் ஞானத்தையும், உன் அருகில் இருக்கிறார் என்பதையும் கூறி ஆறுதல்படுத்துகிறார்.

 

இப்படிப்பட்ட தேவனை அறியாவிட்டால் நீ உன்னை பாவி என்று உணர்ந்து, மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அவர் உன் ஆண்டவரும் இரட்சகருமாய் இருக்கிறார். அவரே உன் தேவன் என்று இந்த சங்கீதம் நமக்கு போதிக்கிறது.