சங்கீதம் 1:4
துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான நிலை
அ. துன்மார்க்கரோ அப்படியிராமல்:
நீதிமானைக் குறித்த ஒவ்வொரு உண்மைகளும் – இலையுதிராதிருக்கிற மரம், தொடர்ச்சியான ஜீவனும் போஷிப்பும், கனிதரும் வாழ்க்கை, செழிப்பு – இவையெல்லாம் துன்மார்க்கனைக் குறித்ததல்ல. ஒருவேலை சில சமயங்களில் மேற்கூறிய இவையெல்லாம் துன்மார்க்கனுடைய வாழ்க்கையிலும் நிறைவாக இருப்பதுபோல் கூட தோன்றும். ஆனால் அப்படி இருப்பதில்லை. இவைகளில் சில சில மணித்தியாலங்கள் துன்மார்க்கனுடைய வாழ்க்கையில் இருக்கும். இருந்தும் அவை உண்மையில் அவனுடைய வாழ்க்கையில் இல்லை என்பதே நிஜம்.
ஆ. காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்ப்போல் இருக்கிறார்கள்:
பதர் என்பது தானியத்தில் மேல் ஒட்டியிருக்கும் சிறிய தொலி. அந்த தானியம் மாவாக மாற்றப்பட வேண்டுமானால் அந்த உமிகள் விலக்கப்படவேண்டும். அப்படி தானியத்திலிருந்து உமியைப் பிரித்தெடுக்க தானியத்தைக் கொத்தாக காற்றில் வீசினால் போதும்; உமிகளுக்கு சொல்லக்கூடிய அளவு எடை இல்லாமையால் அவை பிரிந்து பறந்துபோய்விடும். இப்படித்தான் துன்மார்க்கனுடைய வாழ்க்கை நிலையற்றதாக இருக்கும்.
ஸ்பர்ஜன் ஓரிடத்தில் சொன்னார், பதர் என்பது “உள்ளார்ந்த முறையில் பயனற்றதாகவும், செத்ததாகவும், உதவாததாகவும், எளிதாக சிதறி ஓடுகிறதாகவம்” இருக்கும் என்று. ஒரு மரத்திற்கும் பதருக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு.
No Comments