சங்கீதம் 1:3

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,

தன் காலத்தில் தன் கனியைத் தந்து,

இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்;

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”

 

  1. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவனாய் இருப்பான்:

நீர்க்காலின் ஓரமாய் இருக்கிற மரம் தொடர்ச்சியான நீராதாரத்தை உடையதாக இருக்கும். அந்த மரத்திற்கு தேவையானது எப்போதும் கிடைப்பதால், அது வாடிப்போவதில்லை. நாம் எப்போதும் தேவைகளோடு இருப்போம் என்றால், நாம் நீர் கால்களின் ஓரமாய் நடப்பட்டு இருக்கிறோமா என்பதை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

இந்த மரமானது ஆளத்தில் வேரூன்றி திடமானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. அதுபோல, நீதிமானின் வாழ்வும் பலமானதாகவும் நிலைத்தன்மையுடனும் காணப்படும்.

  1. தன் காலத்தில் தன் கனியைத் தரும்:

நீதிமான் ஆவியின் கனிகளைத் தருகிறவனாக இருப்பான் (கலா 5:22-23). இந்த மரத்தில் இருந்து கனி இயல்பாகவே வரும். ஏனென்றால் அது நீர்கால்களின் ஓரமாய் நடப்பட்டு இருக்கிறது – தேவனுடைய வார்த்தை. இது ஜீவ ஆதாரத்தில் நிலைத்திருக்கிறது. இயேசு யோவான் 15:5ல் அவரில் நிலைத்திருப்பதன் மூலம் நாம் கனிகளைக் கொடுக்கிறவர்களாக இருப்போம் என்று கூறினார். கனிக்கும் ஒரு காலம் உண்டு. சிலர் ஆரம்பத்தில் நீதிமான்களாக நடக்கத் துவங்கும்போது உடனே கனிகொடாதபடியால் துவண்டுபோகிறார்கள். அவர்களுடைய காலத்தில் கனிகொடுக்கும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டியது அவசியம்.

தேவனின் கனித்தோட்டத்தில் ஒரு மரமும் கனி விளையாத மலட்டு மரம் அல்ல. எனினும், ஒரு ஆப்பிள் மரம் சில காலங்களில் கனி கொடாதது போல் அவை சில நேரங்களில் கனி இல்லாத நிலையில் இருக்கலாம்; ஆனால் அவை மீண்டும் செழித்துத் தோன்றும். (Trapp)

  1. அந்த மரத்தின் இலை உதிருவதில்லை:

பழுப்பு நிரமானதும், மரித்ததும், உளர்ந்ததுமான இலைகள் ஒரு மரம் மரித்துப்போனதற்கான (அ) உலர்ந்துபோனதற்கான அரிகுறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட அடையாளங்கள் நீதிமானில் இருப்பதில்லை. அவனுடைய இலைகள் ஜீவனுள்ளதாகவும் பசுமையானதாகவும் இருக்கும்.

  1. அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்:

நீதிமான் “தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்” மற்றும் அவன் செய்வதெல்லாம் அவனுக்கு செல்வத்தையும் சுகத்தையும் கொடுக்கிறது என்று பொருளல்ல. மாறாக, நீதிமானின் வாழ்வின் எல்லாவற்றிலும் இருந்தும் தேவன் நன்மையையும் ஆச்சரியத்தையும் உருவாக்குகிறார் (ரோமர் 8:28). கடினமான சூழ்நிலைகளிலும் கூட செழிப்பான காரியங்கள் உருவாக்கப்படுகிறது.