இது கிறிஸ்தவ மார்கத்தில் பிரதான கேள்வியாக இருக்கிறது. இயேசு சொல்கிறார், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்று. – யோவான் 3:3

நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா? பொதுவாக இந்த கேள்விக்கு வரும் தவறான பதில், “நான் திருச்சபையில் சந்தா கட்டி உறுப்பினராக இருக்கிறேன்; ஆதலால் நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன்” என்பது. ஆயிரக்கணக்கான  பெயர் கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமம் விளக்கும் மறுபடியும் பிறந்திருப்பதற்கான அறிகுரிகளும் அடையாளங்களும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

மறுபடியும் பிறந்திருப்பதற்கான அறிகுறிகளும் அடையாளங்களும் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கவனமாக படியுங்கள். நான் அவைகளை 1 யோவான் நிரூபத்திலிருந்து காட்டுகிறேன்.

முதலில், அப். யோவான் சொல்கிறார், “தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான்” மறுபடியும் “தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான்” என்று (1 யோ 3:9,5:18).

ஒரு மறுபடியும் பிறந்த  (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன் பாவத்தை ஒரு தொடர்பழக்கமாக செய்துகொண்டிருக்க மாட்டான். அவன் இருதயபூர்வமாகவோ, சித்தங்கொண்டோ, முழு ஈடுபாடோடோ, ஒரு புதுப்பிக்கப்படாத மனிதனைப்போல பாவம் செய்துகொண்டிருக்க மாட்டான். அவன் செய்த செயல்கள் பாவமா, இல்லையா என்று யோசிக்காத, அதைக்குறித்து வருந்தாத ஒரு காலம் இருந்திருக்கும். அவனுக்கும் பாவத்திற்குமிடையே சச்சரவு ஏதுமின்றி நன்பர்களாக இருந்திருப்பார்கள். இப்போது அவன் பாவத்தை வெறுக்கிறான், அதை விட்டு ஓடுகிறான், அதை எதிர்த்துப் போராடுகிறான், அதை அவனைப் பிடித்த பெரிய கொள்ளை நோயாக பார்க்கிறான், பாவத்தின் இருத்தலின் சுமையைத் தாங்கமுடியாமல் முனகுகிறான், பாவத்தின் தூண்டுதலில் விழும்பொழுது புலம்புகிறான், அதிலிருண்டு ஒட்டுமொத்தமாக விடுதலையடைய வேண்டும் என்று ஏங்குகிறான். சுருங்கக்கூறின், பாவம் அவனை மகிழ்விக்காது, அதை அவன் அலட்சியப்படுத்துகிறான்; அது அவன் வெறுக்கும் அறுவருப்பான விஷயமாகிறது. இருந்தபோதும் அது அவனுக்குள் தங்குவதை அவனால் தடுக்க முடியாது. அவன் அவனில் பாவம் இல்லை என்று சொல்வானானால், சத்தியம் அவனுள் இராது (1 யோ 1:8). ஆனால், அவன் அதை மனதார வெறுக்கிறான், மற்றும் அவனுடைய பெரிய விருப்பம் பாவத்தை ஒருபோதும் செய்யக்கூடாது என்பதே. கெட்ட சிந்தனைகள் அவனுக்குள் எழுவதை அவனால் தடுக்க முடியாது, குற்றம் குறைவுகள் இருக்கலாம், அவனுடைய வார்த்தையிலும் செயலிலும். யாக்கோபு சொல்லியபடி, “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” (யாக் 3:2). ஆனால் அவன் உண்மையாக சொல்ல முடியும், அவனுடைய முழுதன்மையும் பாவத்திற்கு இசைவதில்லை மற்றும் காரியங்களுக்காக அன்றாடம் கடவுளுக்கு முன்பாக துன்பமும் துக்கமும் அடைகிறான்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

இரண்டாவதாக, யோவான் சொல்கிறார், “இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறார்.” (1 யோ 5:1)

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன், அல்லது புதுப்பிக்கப்பட்ட மனிதன், தன் ஆன்மா இயேசு கிறிஸ்து என்னும் ஒரே இரட்சகரால் தான் மன்னிக்கப்படக்கூடும் என்று அவன் ஆணித்தரமாக நம்புகிறான்; கிறிஸ்து இந்த நோக்கத்திற்காக பிதாவாகிய கடவுளால் நியமிக்கப்பட்ட தெய்வீக நபர் என்றும், அவரைத் தவிர மீட்பர் இல்லை என்றும் அவன் நம்புகிறான். தன்னில் உள்ள தகுதியின்மையைத் தவிற அவன் வேறு எதையும் பார்ப்பதில்லை. கிறிஸ்துவில் அவனுடைய முழு நம்பிக்கைக்கான அடித்தளத்தைக் காண்கிறான். அவரை விசுவாசிகிறபடியால், அவனுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டது என்று அவன் நம்புகிறான். கிறிஸ்து சிலுவையில் முடித்த செயல் மற்றும் மரணத்தின்மூலம், கடவுளுடைய பார்வையில் நீதியை அடைந்தவானாக எண்ணப்படுகிறான் என்று நம்புகிறான். அதன் காரணமாக மரணத்தையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து பதரான். அவனுக்கு ஒருவேலை பயமும் சந்தேகமும் இருக்கலாம். சில சமயங்களில் தனக்கு விசுவாசம் இல்லையோ என சந்தேகப்படுவதாகக் கூட சொல்லலாம். ஆனால் அவர் நித்திய வாழ்வின் நம்பிக்கையை அவரது சொந்த நற்குணத்தின் மீதோ, மனந்திரும்புதலிலோ, ஜெபங்களிளோ, ஊழியக்காரர் மீதோ, அல்லது சபையின் மீதோ வைக்கிறாரா என்று கேட்டுப்பாருங்கள். அவனிடம் கேளுங்கள், ஒருவேலை அவன் கிறிஸ்துவை கைவிட்டு, வேறு ஏதோ மத வழியில் தன் நம்புக்கையை வைப்பானா என்று. அதைச் சார்ந்து,அவன் கூறுவான், அவன் பெலவீனமோகவும் மோசமாகவும் உணரும்போதும், மண்ணுக்காக மாணிக்கமாகிய கிறிஸ்துவை ஒருபோதும் கைவிடமாட்டான். அதைச் சார்ந்து, தனக்கு கிறிஸ்து விலைமதிப்பற்றவர் என்றும், அவரே தனது ஆத்துமாவுக்கு ஏற்றவர் என்றும் அவன் கூறுவான். இதனை கிறிஸ்துவைத் தாண்டி வேறு எங்கும் கண்டுபிடிக்கமுடியாது என்று நன்கு உணர்ந்தவனாக கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வான்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

மூன்றாவதாக, யோவான் சொல்கிறார், “நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவன்” – 1 யோவான் 2:29

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன் என்பவன் பரிசுத்தமான மனிதன். அவன் கடவுளுடைய சித்தத்தின்படி வாழ முயற்ச்சிக்கிறான். கடவுளை பிரியப்படுத்தும் செயல்களை செய்யவும், கடவுளுக்குப் பிரியமில்லாத காரியங்களைத் தன்னைவிட்டு விலக்கக்கூடியவனாகவும் காணப்படுகிறான். தன் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், சிந்தையோடும், பெலத்தோடும் கடவுளை நேசிப்பதே அவனுடைய பிறதான குறிக்கோளாக காணப்படும். அதே போல, தன்னைப்போல் பிறனையும் நேசிக்கிறவனாக இருப்பான். கிறிஸ்துவை தன் முன் மாதிரியாகவும், இரட்சகராகவும் பார்க்கவேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாக இருக்கும். கிறிஸ்து கட்டளையிட்டவைகளை செய்கிறவனாக இருந்து தன்னை கிறிஸ்துவின் ஸ்நேகிதனாக காட்ட ஆவல் கொண்டவனாக இருப்பான். அவன் முழுமையற்றவன் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் சொல்வதற்கு முன் அதை அவன் ஒத்துக்கொள்வான். அவனுள் குடிகொண்டுள்ள சீர்கேட்டைக் குறித்து உணர்வுள்ளவனாக, அதன் அழுத்தத்தால்  முனகுகிறவனாக காணப்படுவான். அவனுள் ஒரு பாவ பிரமானம் இருந்து தொடர்ந்து கிருபைக்கு எதிராக யுத்தம் செய்வது, தேவனைவிட்டு தூரம் விலக்க முயற்ச்சிப்பதை கண்டுபிடிக்கிறான். பாவத்தின் இருத்தலை அவனால் தடுக்கமுடியாமல் இருப்பினும், அவன் அதற்கு இசைவதில்லை. எல்லாவிதமான குறைபாடுகள் காணப்பட்டாலும், அவனுடைய வாழ்வின் சராசரி வளைவுகளும், அவனுடைய வழியும் பரிசுத்தத்தை சார்ந்து காணப்படும் – அவனுடைய செயல்களில் பரிசுத்தம், அவனுடைய விருப்பங்களில் பரிசுத்தம், அவனுடைய பழக்கவழக்கங்களில் பரிசுத்தம். திசைமாற்றங்கள், வழிவிலகல்கள் இருப்பினும், காற்றை எதிர்த்து பயனிக்கும் தோனியைப்போல, அவனுடைய வாழ்க்கையின் போக்கு ஒரே திசையில், கடவுளுக்கு நேராக செல்லும். அவன் கடவுளுக்காக வாழ்வான். சில சமயங்களில் தான் ஒரு கிறிஸ்தவனா என்று கேள்வி எழுப்பும் சூழலுக்குள் விழுந்தாலும், பூர்வகால ஜான் நியூட்டன் சொல்வது போல, “நான் என்னவாக இருக்க வேண்டுமோ அப்படி இல்லை,
நான் என்னவாக இருக்க விரும்புகிறேனோ அப்படியுமில்லை,
நான் மறுமையில் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ அப்படியுமில்லை,
ஆனால், நான் முன்பு இருந்தது போல இப்போது இல்லை,
நான் இருப்பது கடவுளுடைய கிருபையால்.” என்று அவனால் சொல்லமுடியும்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

நான்காவதாக, யோவான் சொல்கிறார், “நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்.” – 1 யோவான் 3:14

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன் கிறிஸ்துவின் சீஷர்களுக்கென்று தனி பாசமுடையவனாக காணப்படுவான். பரலோகத்தில் இருக்கும் அவனுடைய பிதாவைப்போல, அவன் எல்லா மனிதர்களிடத்திலும் பொதுவான அன்பைக் காட்டுவான், இருப்பினும் அவனோடு ஒருமனப்படுகிற கடவுளுடைய பிள்ளைகள் மேல் தனி பாசம் உடையவனாக காணப்படுவான். அவனுடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவைப் போல மோசமான பாவிகளையும் நேசிப்பான், அவர்களுக்காக கண்ணீர் வடிப்பான்; இருப்பினும் விசுவாசிகள் மீது அவன் அசாதாரனமான அன்பைக் கொண்டிருப்பான். அவன் அவர்களுடைய ஐக்கியத்தில் இருப்பதுபோன்ற உணர்வை அவனுடைய வீடு அவனுக்கு கொடுக்காது. அவன் பூமியின் தலைசிறந்தவர்கள் மத்தியில் இருந்தாலும் பரிசுத்தான்களோடு இருப்பது போன்ற மகிழ்ச்சியை உலகத்தாரிடம் காணான். மற்ற்றோர், தாங்கள் தேர்ந்தெடுக்கும் சமூதாயத்தின் கல்வி, புத்தி, இணக்கம், பதவி ஆகியவற்றின் மூலம் அவர்களை மதிப்பார்கள். ஆனால், புதுப்பிக்கப்பட்ட மனிதன் கிருபையையே அளவுகோளாக வைத்திருப்பான். அதிக கிருபை பொருந்திய, கிறிஸ்துவைப் போலவே இருப்பவர்களை அவன் அதிகமாக நேசிப்பான். அவன் அவர்களை தன் சொந்த குடும்ப உருப்பினர்களாகவே பாவிப்பான். அவன் அவர்களை ஒரே எதிரிக்கு எதிராக யுத்தம்செய்யும் தன் சக போர்வீரர்களாக பாவிப்பான். அவன் அவர்களை ஒரே சாலைவழியாக ஒரே இடத்திற்கு பயனிக்கும் அக பயனிகளாக பாவிப்பான். அவன் அவர்களை புரிந்துகொள்வான், அவனை அவர்கள் புரிந்துகொள்வார்கள். பதவியிலும், ஸ்தானத்திலும், செல்வத்திலும் அவனுக்கும் அவர்களுக்கும் பெருத்த வித்தியாசம் காணப்பட்டாளும், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ஜனங்கள் என்பதே முக்கியம். அவர்கள் அவனுடைய பிதாவின் குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறார்கள். அவனால் அவர்களை நேசிக்காமல் இருக்க முடியாது.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

ஐந்தாவதாக, யோவான் சொல்கிறார், “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்” – 1 யோவான் 5:4

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன், உலகின் கருத்தியலை அவனது சரி மற்றும் தவறின் அளவீடாக வைக்க மாட்டான். தான் உலகின் நீரோட்டத்திற்கு எதிராக செல்வதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். உலகின் வழி, கருத்து மற்றும் பழக்கவழக்கங்களை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவான். “அடுத்தவன் என்ன சொல்லுவான்?” என்பது பற்றி அவன் யோசிக்க மாட்டான். மற்றவர்களின் கருத்துகள் அவனை திசைதுருப்பாதபடி பார்த்துக்கொள்ளுவான். உலகத்தின் இச்சையை ஜெயிக்கிறவனாக காணப்படுவான். அவனை சுற்றியுள்ள அநேகர் சந்தொஷம் என கொண்டாடும் காரியங்களில் அவன் மகிழ்ச்சியடையான். அவனால் அவற்றின் இன்பங்களை அனுபவிக்க முடியாது; அது அவனை சோர்வடையச் செய்யும்: அது அவனுக்கு வீனாகவும், பயனற்றதாகவும், அழியாத மனிதனுக்குத் தகுதியற்றதாகவும் தோன்றும். உலகின் பயத்தை ஜெயிக்கிறான். அவனை சுற்றி இருப்பவர்கள் தேவனியற்றது என் கூறினாலும் அதை செய்வதில் திருப்தியடைகிறான். அவர்கள் அவனை குற்றம் சாட்டுகிறார்கள்: அது அவனை அசைக்கவில்லை. அவர்கள் அவனை கேலி செய்கிறார்கள்: அவன் அவர்களுக்கு இடமளிக்கவில்லை. அவன் மனிதனின் துதியைவிட தேவனின் துதியை விரும்புகிறான். அவன் மனிதனை அவமதிப்பதைவிட தேவனை அவமதிப்பதைக் குறித்து பயப்படுகிறான். அவனுக்கு அதின் விலை தெரியும். அவன் மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்படுவதையும் பாராட்டப்படுவதையும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. நடப்பு வழக்கு மற்றும் பழக்கவழக்கங்களுக்கு அவன் இனி அடிமை அல்ல. உலகத்தை மகிழ்விப்பது என்பது எப்போதும் அவனுக்கு இரண்டாம் பட்சமே. கடவுளைப் பிரியப்படுத்துவதே அவன் பிரதான நோக்கம்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

ஆறாவதாக, யோவான் சொல்லுகிறார், “தேவனால் பிறந்தவன் எவனும் தன்னைக் காக்கிறான்.” – 1 யோவான் 5:18

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன் அவனது சொந்த ஆன்மாவைக்குறித்து மிகவும் கரிசனையுள்ளவனாக இருக்கிறான். அவன் பாவத்தை மாத்திரம் அல்ல, அதற்கு வழிநடத்தும் எதையும் விட்டுவிட முயற்ச்சிக்கிறான். அவன் யாரோடு சகவாசம் வைக்கிறான் என்பதில் கவனத்தோடு இருக்கிறான். ஆகாத சம்பாஷனைகள் இருதயத்தைக் கெடுக்கும் என்பதை அறிந்தவன். ஒரு ஆரோக்கியமான மனிதனை தொற்று நோய் பிடிப்பது போல, பாவம் எவ்வலவு கொடிய தொற்றாக இருக்கிறது என்ற வீரியத்தை உணர்ந்தவனாக இருப்பான். அவன் நேரத்தை சரியாக இலாபகரமாக செலவிடுவதில் கவணம் செலுத்துகிறான்.  அவன் உருவாகும் நன்பர்கள் வட்டாரத்தைக் குறித்து கவனம் உள்ளவனாக இருக்கிறான்: அவன் நன்பர்கள் நல்லவர்களாகவும், நேசிக்கத்தக்கவர்களாகவும் நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் இருப்பதைத் தாண்டி அவனது ஆத்துமாவிற்கு நன்மையாக காணப்படுவார்களா என்பதை யோசிக்கிறான். அவனது அன்றாட பழக்கவலக்கங்களைக் க்குறித்து கவணம் உள்ளவனாக இருக்கிறான்: அவன் சொந்த இருதயம் எவ்வளவு வஞ்சனையுள்ளது என்பதையும், உலகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையும், மற்றும் பிசாசு அவனை வீழ்த்த அயராது பாடுபடுகிறான் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுவான். ஆகவே, அவன் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பான். அவன் அந்நிய நாட்டில் இருக்கும்  ராணுவ வீரனைப்போல தனது கவசங்களை எப்போதும் அனிந்தவனாக சோதனையை எதிர்கொள்ள ஆயத்தமுள்ளவனாக இருக்க விரும்புவான். அவன் எப்போதும் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறான் என்பதை தன் அனுபவங்கள் மூலம் நன்கு உணர்ந்தவன். விளிப்போடும், தாழ்மையோடும், ஜெபத்தால் நிறைந்தும் இருப்பதைக் கற்றுக்கொள்ளுகிறான்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

இவைகளே ஒருவன் மறுபடியும் பிறந்திருக்கிறான் என்பதற்கான அறிகுறிகள். என்னுடன் இதுவரை வாசித்துவந்த ஒவ்வொருவரும், இவைகளை கவணத்தோடு மறுபடியும் படித்து இருதயத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.

இந்த அறிகுறிகள் ஒவ்வொரு நபர்களில் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படும் என்பது எனக்கு தெரியும். சில நபர்களில் இவை மயக்கமாக, மங்களாக, பலவீனமாக, கண்டுபிடிக்க முடியாத நிலையில் கூட காணப்படும். மற்ற சிலரில் இவை துணிவாக, கூர்மையாக, தெளிவாக, தவறின்றி காணப்படும்: அவற்றை யாரும் கண்டு பிடிக்கலாம். இந்த அறிகுறிகள் ஒருசில சிலரில் தெளிவாக பார்க்ககூடியதாக இருக்கும்; மற்றசில மற்றவர்களில் தெளிவாக பார்க்ககூடியதாகவும் இருக்கும். ஒரே ஆன்மாவில் இவ்வனைத்து அறிகுறிகளும் ஒரே அளவுகோளில் வெளிப்படுவது மிக மிக அரிது. நான் இவையெல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளுகிறேன்.

இங்கே மறுபடியும் பிறந்த மனிதனில் காணப்படும் ஆறு அறிகுறிகள் படமாக்கப் பட்டுள்ளது. கிறிஸ்துவின் சபைக்கு அப்போஸ்தலரால் எழுதப்பட்ட இந்த பொதுவான நிரூபத்தில் ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் பாவம் செய்யான் என்றும், இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிப்பான் என்றும், நீதியை செய்கிறான் என்றும், சகோதரரை நேசிக்கிறான் என்றும், உலகத்தை ஜெயிக்கிறான் என்றும், தன்னைக் காத்துக்கொள்ளுகிறான் என்றும் பார்த்தோம். வாசகர்கள் இவைகளையெல்லாம் கவணத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

இப்போது இந்த விஷயங்களைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? மறுபிறப்பு திருச்சபையின் சலூகைகளுக்காக மட்டும் என்று நினைப்பவர்களைக் குறித்து என்ன சொல்வது? நான் தைரியமாக சொல்வேன். நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். மறுபிறப்பின் இந்த  ஆறு அரிகுறிகள் ஒருவரில் காணப்பட்டால் அவர் மறுபடியும் பிறந்தவர்; காணப்படாவிட்டால் அவர் மறுபடியும் பிறக்காதவர். இந்த முடிவுக்கே நாம் வர வேண்டும் என்று அப்போஸ்தலர் யோவான் விரும்பியிருப்பார்.

வாசகனே, இந்த அரிகுறிகள் உன்னில் காணப்படுகிறதா? நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?