ஏசாயா 43:25 “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.”
“நான், நானே” – என்ற ஒன்றுக்கும் மேல் கூறுதல் அந்த வார்த்தையின் சொல்லழுத்தத்தையும் வீரியத்தையும் காட்டுகிறது.
“குலைத்துப்போடுகிறேன்” – பாவம் கறைபடுத்துகிறது. தேவன் சுத்தமாக பாவத்தின் கறைகளை அகற்றி குலைத்துப்போடுகிறார்.
“என் நிமித்தமாகவே“- தேவன் உன்னை மன்னிப்பதற்கான காரணம் உன்னிடம் இல்லை. தேவன் தம்முடைய காரணத்திற்காகவும், தம்முடைய மகிமைக்காகவும் உன்னை மன்னிக்கிறார்.
“நினையாமலும் இருப்பேன்“- மன்னிப்பு என்பது உன்னுடைய பாவங்களை எல்லாம் தேவன் மறந்துவிடுவதற்கான வாக்குத்தத்தம் அல்ல. மன்னிப்பு என்பது அடக்கம்பண்ணுதலோடு தொடர்புடையது. மன்னிப்பு என்பது பாவத்தால் செத்து அழுகிக்கொண்டிருக்கும் உன்னுடைய சரீரத்தை புதைத்து அதன் கிரியையை என்றும் உனக்கெதிராக கொண்டுவரமாட்டார் என்ற வாக்குறுதி.
இதை நான் இப்படி சொல்ல விரும்புகிறேன்:
மன்னிப்பு என்றால் தேவன் சட்டரீதியாக உனக்கு பதிலாக மரித்து உன்னுடைய எல்லா பாவங்களையும் அழுக்கற்ற நிலையில் கழுவி சுத்திகரிக்கிறார் (கொலோ 2:13-14). மேலும் அந்த பாவங்களை என்றும் உனக்கு எதிராக கொண்டுவரமாட்டேன் என்ற வாக்குத்தத்தையும் கொடுக்கிறார். சங்கீதம் 32:1 சொல்லுகிறது, “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.” சாத்தான் உன்னுடைய பாவத்தின் மயானத்திற்குச் சென்று, உன்னுடைய மன்னிக்கப்பட்ட பாவங்களையும் உன் நினைவிற்கு கொண்டுவந்து உன்னை குட்ற்றப்படுத்துவான், நிந்திப்பான், தேவனிடம் உள்ள சமாதானத்தை இடையூறு செய்வான்.
அன்பான கிறிஸ்தவனே, சாத்தான் உன்னை தாக்கும்போது, நீ ஜெபத்தில் தேவனிடம் சென்று உன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்த அவருடைய தயவு பெருத்த அன்பிற்காக துதிகளை செலுத்து. மனிதன் சிலநேரங்களில் “ஆம், தேவன் என் பாவங்களை மன்னித்துவிட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால், என்னால் என் பாவங்களை மன்னிக்க முடியவில்லை” என்று சொல்லுகிறான். உன்னை நீயே மன்னித்துக்கொள்ள வேண்டும் என்று வேதம் எந்த இடத்திலும் உன்னை அழைக்கவில்லை. உன்னால் உன்னை மன்னிக்க முடியாது என்று சொல்லுவது வேதத்திற்கு எதிரானதும், திமிர்பிடித்த பேச்சும், முட்டாள்தனமானதும் ஆகும்.
உங்கள் மன்னிக்கப்பட்ட பாவங்களை நினைவில் கொள்ளுக்கிறீர்கள் என்றால், நீங்கள் கல்லரையில் தேவன் புதைத்த அழுகிய துர்நாற்றம் பிடித்தவைகளை தோண்டி எடுக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி செய்யலாகாது. அவை நிச்சயமாக மறந்துபோகப்பட வேண்டும். அதே நேரத்தில், உங்கள் மன்னிக்கப்பட்ட பாவங்களை தேவன் தமது நினைவில் கொண்டுவருவதில்லை என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
மற்றொரு பக்கம், உங்கள் பாவங்கள் சில நேரங்களில் நினைவில் இருப்பது தேவனுடைய கிருபையாக இருக்கும். பின்னர் வரும் பாவங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் எச்கரிக்கையாக தேவன் அப்படி அனுமதிக்கிறார்.
உன்னுடைய எதிர்கால நம்பிக்கை இதுதான் – ஒரு நாள் வரும், அன்று தேவன் உன்னுடைய மனதின் நினைவில் இருக்கும் பாவங்கள் அனைத்தையும் நீக்கிப்போடுவார். உன்னுடைய பாவத்தின் நினைவுகள் பரலோகத்திற்கு உன்னுடன் சேர்ந்து வருவதில்லை. பின்பு, நீ உண்மையில் சொல்லலாம், “விடுதலை, விடுதலை, கடைசியாக இனி என்றென்றும் விடுதலை பெற்றேன்” என்று.
அன்பான நன்பனே, உன்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் மன்னிப்பை கிறிஸ்துவில் அடையமுடியும் என்பது உனக்கு தெரியுமா? கிறிஸ்துவையும் அவருடைய மரணத்தையும் தவிற வேறு எந்த வழியிலும் மன்னிப்பு என்பது சாத்தியமில்லை. நீ இவைகளில் ஒன்றை தெரிவு செய்யலாம்,
(1) உன்னுடைய பாவங்களுக்கான அபராதத்தை செழுத்தித் தீர்த்து பரிகரித்த கிறிஸ்துவின் மரணம்.
(2) உன்னுடைய பாவங்களுக்காக நித்தியம் நித்தியமாக நரகத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
உன் விருப்பத்தின்படியெல்லாம் பாவ மன்னிப்பை பெற்றுவிடமுடியாது. நீ உன் பாவங்களிலிருந்து தெய்வீக மன்னிப்பை அடைய ஒரே வழிதான் உண்டு. அது கிறிஸ்துவின்மூலம் மட்டுமே. பாவத்திற்கெதிரான தேவனின் நித்திய கோபத்திலிருட்நு தப்பித்து மறைந்துகொள்ள பாதுகாப்பான பேழையாக கிறிஸ்து மட்டுமே இருக்கிறார். இப்போதே மனந்திரும்புதலோடு, உன் பாவங்கள் மன்னிக்கப்படும்படியும், நீ இரட்சிக்கப்படும்படியும் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவரை நோக்கி ஜெபம் செய் (ரோமர் 10:13).
No Comments