வேதாகமத்தின் இயல்பு
- வேதம் கடவுள் எழுதி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய வார்த்தை.
- கடவுளின் வார்த்தை சத்தியம் நிறைந்த வார்த்தை (சங்கீதம் 119:160)
- இந்த வார்த்தை அதிகாரம் உடையதுமாய் ஆளுகிறதுமாய் இருக்கிறது .
- மனிதனுடைய வாழ்க்கைக்கு போதுமானது. மனிதனுடைய வாழ்க்கைக்கு நிறைவானது.
வேதாகமத்தின் செய்தி
- வேதத்தில் இயேசு கிறிஸ்து உலகத்தில் பிறப்பார் என்பதை உலகம் ஆரம்பித்து மனிதன் பாவம் செய்தபோது கடவுள் இந்த உலகத்தில் மனிதனை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த உலகத்தில் வரப்போகிறார் என்ற ஒரு செய்தி இந்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
- மனிதன் யார்? மனிதன் எப்படி படைக்கப்பட்டான்? மனிதன் எப்படி இருக்கிறான்? மனிதன் படைக்கப்பட்ட நிலையில் எப்படி இருந்தான்? படைப்பில் இருந்து எப்படி விழுந்து போனான்? விழுந்து போனவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? இதில் இருந்து எப்படி அவன் மனிதன் தப்பிப்பது?
- இந்த செய்தியை நோக்கி தான் இந்த உலகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. வேதம் சொல்லியிருக்கிறது தான் இனிமேலும் நடக்கும்.
மனிதனின் நிலை
- உங்களுக்குள் ஒரு சரீரம் (தொட்டு உணரக்கூடிய) இருக்கிறது ஒரு ஆத்துமா (சிந்தனை; பகுத்தறிவு;) இருக்கிறது; சரீரம் அழியக்கூடியது: ஆத்துமா அழியாது இது ரெண்டும் சேர்ந்தது தான் மனிதன்.
- ஆதாம் மூலம் இந்த உலகத்தில் பிறந்த எல்லா மனுஷனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் .எல்லா மனிதனுக்குள்ளும் மனசாட்சி அவனை குற்றம் தீர்க்கிறது .
- மனிதன் கீழ்படியவே முடியாத நிலையில் இருக்கிறான்
- மனிதன் தான் நினைத்தது போல் ( நற்கிரியை) கடவுளை தேட விரும்புகிறான்
- ஒவ்வொரு மனுஷனும் பாதுகாப்பு இல்லாமல் பயந்து கொண்டே இருக்கிறான் . சகேயு ( லூக்கா 19:1-10) காசு இருந்தும் நிம்மதி இல்லாத நிலைப்பாடு ; குள்ளமான மனிதன் இயேசு அவனை தேடுகிறார் – மனுஷன் கடவுளை தேடி ஒரு நாளும் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் , தேவன் அவனை தேடுகிறார் (ரோமர் 3:11 -தேவனை தேடுகிறவன் இல்லை )
- மனிதனுக்கு பொதுவாக சிந்திக்க தெரியாத ஒரு நிலைப்பாடு– உலகம் முன்னேறி கொண்டே இருக்கிறது ஆனால், மனிதனால் கடவுளை மட்டும் பார்க்க முடியவில்லை ; அவன் பாவத்தில் இருக்கிறான் என்றும் உணரமுடியவில்லை. கடவுளை தான் உருவாக்கி கொள்ளலாம் என்று சிந்திக்கும் நிலை. தான் சாகப்போகிறேன் என்று தெரிந்தும் அதை குறித்து சிந்திக்காத நிலை. நரகத்துக்கும் தேவகோபத்திற்கும் பாத்திரவான்கள். தன்னை தான் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை.
பாவம் என்றால் என்ன?
- 1 யோவான் 3:4- நியாய பிரமாணத்தை மீறுவது பாவம். நியாய பிரமாணம்-(கடவுளின் ஒழுக்க சட்டம்)
- உதாரணமாக – படைத்தவரை வணங்குதல்; கர்த்தருடைய நாளை பரிசுத்தமாக வைத்தல்; கொலை செய்யாமல் இருத்தல் ( திட்டுவதும் கொலைக்கு சமம்).
- பாவத்தின் சம்பளம் மரணம்
தேவனின் சுவிசேஷம்
- மத்தேயு 1:21
மனுஷனுக்கு பாவத்திலிருந்து விடுதலை (எதிர்கால அழிவில் இருந்து விடுதலை)கொடுக்க போகிறார். “இயேசு கிறிஸ்து சுகம் தருவார்; உன்னை பணக்காரன் ஆக்குவார்;உன் கடனை தீப்பார் என்று சொல்லவில்லை”.
- லூக்கா 19:10
இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் கடவுள் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார்
- யோவான் 8:1-11 –இரட்சிப்பு என்பது காணாமல் போனவன் கண்டுபிடிக்கப்படுதல்.
அந்த பெண் விபச்சாரம் (விபச்சாரம் என்பது இச்சையோடு பார்ப்பதும் தான்). செய்த நிலையில் சட்டமுறைப்படி பிடிக்கப்பட்டாள். விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண் விடப்பட்டு, அவளது பாவம் அனைவருக்கும் வெளிப்படையாகி விட்டது. மோசேயின் சட்டப்படி விபச்சாரம் செய்தவரை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் என்பதை அவள் அறிவாள்.அவள் முழுமையாக மரணத்தை எதிர்நோக்கும் நிலையில் நின்றாள். இயேசுவின் இடத்தில் சாட்சிகளோடு கொண்டு வந்த போது “உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லெறியட்டும்” – எல்லாம் கல்லை கீழே போட்டு விட்டு போய்விட்டார்கள் ( நீதிமான் ஒருவனும் இல்லை ) தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் – அவள் தான் பாவி என்று உணர்ந்து அங்கேயே நின்றாள். நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்று இயேசு சொல்கிறார். மன்னிப்பு கர்த்தர் இடத்தில் வருவது. “ஆண்டவரே, நான் பாவத்தில் இருக்கிறேன்; பாவத்தின் சம்பளம் மரணம்” என்று உணர்ந்து, அந்த மரணத்திலிருந்து விடுவிக்குமாறு மனமாறி பாவத்தை ஒப்புக் கொண்டால் மட்டுமே, பாவத்திலிருந்து உண்மையான விடுதலை கிடைக்கும். இயேசு கிறிஸ்துவை தவிர யாராலும் உன் பாவத்தை மன்னிக்க முடியாது – கடவுள் இந்த உலகத்தில் மனிதனாக பாவம் இல்லாதவராக வந்து உங்களுடைய பாவத்திற்காக சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்..
இரட்சிப்பு
- இரட்சிப்பு (salvation/ deliverance ) முழுமையான பாதுகாப்பு என்பதே அதன் பொருள் .
- எதிரி இடத்தில் இருந்து விடுதலை ஆபத்தில் இருந்து விடுதலை இந்த உலகத்தில் பாவத்தில் பிறந்த மனுஷன் பிசாசினால் பிடிப்பட்டுருக்கிறான்.
- இயேசு கிறிஸ்து இல்லாமல் மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை இருக்கிறது கூட நமக்கு புரியாது . இயேசு கிறிஸ்து இல்லாமல் நமக்கு கடவுள் யாருனே தெரியாது.
“ வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”.
“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்கிறார்”.
“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்”.
“என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
இந்த இயேசு கிறிஸ்துவினிடத்தில் மனந்திரும்புங்கள் இது தான் கிறிஸ்துமஸ் செய்தி வேறு எதுவும் கிடையாது. நீங்கள் ஒருவரும் நரகத்திற்கு போக
கூடாது என்பது தான் கடவுளின் ஆசை.
ஆமென்!

No Comments