பரிசுத்த வேதாகத்தில் கடவுளைப் பற்றி மட்டும் கூறாமல் அநேக தனிப்பட்ட
மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் வாசிக்க முடியும். பொதுவாக வேதத்தில்
மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகத்தில் அல்லது இரண்டு புத்தகத்தில்
இருந்து வாசிக்கலாம். உதாரணமாக தாவீதின் வாழ்க்கையை குறித்து நாம் ஒன்று
மற்றும் இரண்டு சாமுவேல் புத்தகத்தில் இருந்து வாசிக்கலாம். இயேசு கிறிஸ்துவின்
வாழ்க்கையை நாம் நான்கு சுவிசேஷத்தில் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும்
யோவான்) இருந்து வாசிக்கலாம். வேதத்தில் ஒரு மனிதனைக் குறித்து புதிய
ஏற்பாட்டில் பரவலாக அங்கும் இங்குமாக கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு
தொடர்ச்சியான தொகுப்பாக இல்லாமல் புதிய ஏற்பாட்டின் ஆறு புத்தகங்களில்
இவரைப் பற்றி பேசியிருக்கிறது. அவர் பெயர் யோவான் மாற்கு.
புதிய எர்பாட்டில் நான்கு மனிதர்கள் யோவான் என்ற பெயரை
பெற்றிருந்தார்கள்.

  1. சீமோன் பேதுருவின் தகப்பன் – யோவான்.
  2. யோவான் ஸ்நானகன் – சகரியா எலிசபெத்தின் குமாரன்
  3. யோவான் சீஷன் – யாக்கோபின் சகோதரன், யோவான் சுவிஷேசம் ,
    1-3யோவான், வெளிப்படுத்தின விஷேசத்தின் ஆசிரியர்.
  4. யோவான் மாற்கு- பர்னபாவின் உறவினன். இவர் மாற்கு
    சுவிஷேசத்தின் ஆசிரியர்.

நாம் சிந்திக்க போகும் நபர் யோவான் மாற்கு- பர்னபாவின் உறவினன். இவர்
மாற்கு சுவிஷேசத்தின் ஆசிரியர்.
புதிய ஏற்பாட்டில் இவர் யோவான் மாற்கு என்று எல்லா இடங்களிலும்
அழைக்கப்படவில்லை. சில இடங்களில் யோவான் என்றும், சில இடங்களில்
மாற்கு என்றும், சில இடங்களில் யோவான் மாற்கு என்றும், ஒரு இடத்தில்
பெயர் குறிப்பிடாமல் வாலிபன் என்றும் அழைக்கப்படுகிறார். (அப். 12:12, 25;
15:37; 13:5, 13; 15:39; கொலோசயேர் 4:10; பிலேமோன் 1:24; 2தீமோத்தேயு
4:11; 1பேதுரு 5:13; மாற்கு 14:51-52).
பின்வரும் கட்டுரைகளில் இவரின் வாலிப நாட்கள், ஆரம்ப ஊழியம்,
பின்னடைவு, மனதிரும்பிய வாழ்வு, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
என்பதை ஒவ்வொரு கட்டுரைகளாக பார்ப்போம்.