தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு,
- வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும்.
- வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும்.
- பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க வேண்டும்.
- வேதத்தை கிராமமாய் வாசிக்க வேண்டும்.
- வாசித்த வேதபகுதியை நினைவில்கொள்ள உழைக்க வேண்டும்.
- நீங்கள் வாசித்த வேத பகுதியை திரும்ப நினைத்து பார்க்க வேண்டும்.
- தாழ்மையுள்ள இருதயத்துடன் வேதத்தை வாசிக்க வேண்டும்.
- கொடுக்கப்பட்ட வேத வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
- வேதபுத்தகத்தை அவமதிக்ககூடாது.
- ஆழமான அன்போடு வேத வார்த்தையினிடத்தில் வா.
- வேதத்தை வாழ்வில் பயிற்றுவி.
- வேத பகுதிகளில் சொல்லப்பட்ட வார்த்தைகள், வாக்குத்தத்தங்கள்,ஞான போதனைகள், கட்டளைகளை கவனியுங்கள்.
- நீங்கள் வாசித்த வேத பகுதியோடு உங்களை ஒப்பிடுங்கள்.
- சில வேத பகுதிகள் உங்களோடு குறிப்பாக பேசும்போது அதை கவனமாய் எடுத்துக்கொள்ளுங்கள்.
- வாசிக்கிற வேத பகுதியை ஆசீர்வாதமாக்கி தர ஜெபிக்கவேண்டும்.