ஒரு பெரிய வர்த்தக மனிதன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வெளிவூர் சென்றிருந்தான். அவன் அரசாங்கத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தான். அவன் தன் பயணத்தை முடித்து வனாந்திர பாதையில் வரும் போது வாசிக்கும் படியாக ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. அவன் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தான். அப்படி அவன் வாசித்துக்கொண்டிருந்த போது மற்றொரு மனிதன் அவன் வாசிக்கும் சத்தத்தை கேட்டு, நீர் வாசிக்கும் பகுதியின் அர்த்தத்தை நீ அறிந்த்திருக்கிறாயா என்றான்.

வாசித்த அந்த மனித எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும், அவளுடைய பொக்கிஷமேல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியன் (அப் 8:27).பிலிப்பு ஆவியானவரால் ஏவப்பட்டு ரதத்தோடு சேர்க்கப்பட்டு (அப் 8:26-29,30, 31, ஏசா 53:7-8)மந்திரிர்க்கு வேதத்தில் இருந்து வாசித்த பகுதியை விளக்கப்படுத்தினான். மந்திரியின் கேள்வி வேதத்தை விளக்கப்படுத்தலின் அவசியத்தை உணர்த்துகிறது. பிலிப்பு என்ன சொல்லுகிறார் என்றால் நீர் வாசிக்கிற வேத பகுதி இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்றான். அதின் விளைவாக அந்த எத்தியோப்பியன் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசித்து இரட்சிக்கப்பட்டான்.

இந்த நிகழ்வு இரண்டு காரியங்களை முன்வைக்கிறது. முதலாவது, வேதாகமத்தில் இருக்கிற வார்த்தைகளை பார்ப்பதால், வேதாகமத்தை வாசிக்கும் நபர் அதின் அர்த்தத்தை முழுவதுமாக புரிந்துவிட்டார் என்பது அல்ல. வாசிக்கப்படுகிற வேதபகுதி உண்மையிலே என்ன சத்தியத்தை கூறுகிறது என்று கவனிப்பது தான் அவசியம். இரண்டாவதாக, சரியான வழிகாட்டல் மற்றவர்களை வேதத்தை சரியான முறையில் புரிந்துக்கொள்ள உதவுகிறது. பிலிப்புவின் கேள்வி என்ன? நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்? அப்படி என்றால் அந்த மந்திரி தான் வாசிக்கும் பகுதின் கருத்தை புரியாமல் வாசித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அதின் கருத்து புரியவில்லை என்பதாலே அவன் பிலிப்புவை தன் ரதத்தோடு சேர்த்துக்கொண்டு அவனிடம் விளக்கத்தை பெற்றுக்கொண்டான். 

நெகேமியா எருசலேமின் மதில்களை கட்டி முடித்த பின்பும், இஸ்ரவேல் புத்திர்கள் தங்கள் பட்டனங்களை சுதந்தரித்த பின்பு, எஸ்ரா என்னும் வேதபாரகன் மோசேயின் நியாயபிரமாணத்தை காலமே துடங்கி மத்தியானம் மட்டும் வாசித்தான் (நெகே 8:1-3). வாசித்த பின்பு அதை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள் வ-7.வசனம் 8 அவர்கள் தேவனுடைய நியாயபிரமாணத்தை தீர்க்கமாய் வாசித்து, அர்த்தம் சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளக்கம்பண்ணினார்கள். அதின் விளைவாக வசனம் 12 அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.

ஏன் வேதாகம வியாக்கியானம் முக்கியம்?

வேதாகம வியாக்கியானம் ஏன் முக்கியன் என்றால், வேதத்தை சரியாக புரிந்துக்கொள்ளவும், அதிலுள்ள போதனைகளை சரியாக போதிக்கவும் வேதாகம வியாக்கியானம் அவசியமாக இருக்கிறது. இன்றைக்கு வேதத்தின் செய்தியை சொல்லுவதற்கு முன்பாக அந்த செய்தியின் அர்த்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டும். வேதத்தின் சிறப்புகளை சொல்லுவதற்கு முன்பாக அதின் சாராம்சத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும். வேதாகம வியாக்கியானம் இல்லை என்றால் நாம் அநேக முக்கிய சத்தியங்களை வேதத்தில் இருந்து பார்க்க தவறுகிறோம். வியாக்கியானம் என்பது மிகவும் கடினமான வேளை மற்றும் நேரம் அதிகம் செலவு செய்ய வைக்கும் வேளை. இந்த வியாக்கியானம் செய்ய குறுக்கு வழியை நாம் கையாளும் போது தவறான போதனைகளுக்குள்ளாக நம்மை வழிநடத்துகிறது. வியாக்கியானம் செய்ய குறுக்கு வழியை நாம் கையாளும் போது வேத சத்தியமானது புரட்டப்படுகிறது (2 கொரி 4:2), வேத சத்தியமானது அவர்களுக்கு கேடுவரத்தக்கதாக புரட்டுகிறார்கள் (2 பேதுரு 3:16). சிலர் தாங்களே அவர்களுடைய அறியாமையினால் தவறான வியாக்கியானத்தின் கொள்கைகளையே பின்பற்றாமல் இருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற கால கட்டத்தில் அநேக ஜனங்கள் வேதத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம்கொண்டுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அதிக வேத பாட கூடுகைகள் நடைபெறுகிறது, நிறைய வீட்டு கூடுகையில் வேதத்தை படிக்கின்றனர். அதில் எப்படி படிக்கின்றார்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட வேத பகுதியை எடுத்துக்கொண்டு ஒருவர் எனக்கு இந்த பகுதியில் உள்ள வசனம் இந்த அர்த்தத்தை தருகிறது என்பார்.மற்ற ஒரு நபர் இந்த பகுதி எனக்கு இந்த அர்த்தத்தை தருகிறது என்பார். அந்த மாதிரியான வேதாகம கூடுகையில் ஒழுங்கான வியாக்கியான முறைகள் பயன்படுத்தாததினால் அநேக குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள், மோதல்களுக்கு நேரே வழிநடத்தும்.

தேவன் வேதத்தை இந்த முறையில் தான் படிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறாரா? வேதத்தில் குழப்பமான வியாக்கியானங்கள் உள்ள பகுதிகள் நிறைந்திருக்கிறது. அதில் சில உதாரணங்கள். யோவான் 10:28 “நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” என்ற இந்த வசனம் விசுவாசிகளின் நித்திய பாதுகாப்பை குறித்து போதிக்கிறது. இந்த வசனத்தை சிலர் விசுவாசியை கடவுளின் கையிலிருந்து பிரிக்கமுடியாது ஆனால் சிலர் விசுவாசியின் தொடர் பாவத்தினால் விசுவாசியே கடவுளின் கையிலிருந்து விலகி செல்கிறான் என்று போதிக்கிறார்கள். சில விசுவாசிகள் அந்நிய பாஷை பழக்கத்தை 1கொரிந்தியர் 12-14 அதிகாரங்களை தவறாக புரிந்துக்கொள்கிறதினால் அவைகளை நடைமுறைபடுத்தி வருகிறார்கள். சிலர் அதை வாசித்து இது இன்றைய காலத்திற்கு உட்பட்டது அல்ல இது அப்போஸ்தல காலத்தோடு நிறைவடைந்து என்று கூறுகிறார்கள். லூக்கா 1௦:25-37 நல்ல சமாரியனின் உவமையில் வரும் இரண்டு பணம் என்பது இன்று இருக்கும் திருவிருந்து மற்றும் திருமுழுக்கு என்று அடையாளப்படுத்தி போதித்து வருகிறார்கள். இந்த உதாரணங்கள் மற்றும் இன்னும் அநேக குழப்பமான பகுதிகள் ஏன் என்று பார்க்கும் போது விளக்கப்படுத்திவதில் ஏற்படும் தவறுகள். வேதத்தை வியாக்கியானம் செய்யும் முறைகளின் சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றால், நாம் வேதத்தை தவறாகவும், தீயதாகவும் பயன்படுத்த நேரிடும். வேதாகம வியாக்கியானம் ஏன் முக்கியன் என்றால், வேதத்தை சரியாக புரிந்துக்கொள்ளவும், அதிலுள்ள போதனைகளை சரியாக போதிக்கவும் வேதாகம வியாக்கியானம் அவசியமாக இருக்கிறது.

வேதத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேதாகம வியாக்கியானம் முக்கியமானதாய் இருக்கிறது;

வேதாகம வியாக்கியானம் முதலாவது கொடுத்திருக்கிற பகுதியை கூர்ந்து கவனிப்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். வேதாகம தியானத்தின் நோக்கம் என்பது வேதத்தில் உள்ள காரியங்களை கண்டுபிடித்தல் அல்ல, அந்த வேதபகுதியின் அர்த்தத்தை புரிந்துக்கொண்டு, புரிந்துக்கொண்ட அர்த்தத்தை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதே வேதாகம தியானத்தின் நோக்கம். நாம் புரிந்துக்கொண்டதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் தேவன் நமக்கு என்ன சொல்லுகிறார் என்பது தெரியாமலே போய்விடும். வேதாகமம் அநேக காரியங்களை நாம் அறியும்படியாக கூறியுள்ளது. தேவனைப்பற்றி, மனிதனைப்பற்றி, பாவத்தைப்பற்றி, இரட்சிப்பைப்பற்றி மற்றும் எதிர்காலத்தைப்பற்றி அறியும்படியாக கூறியுள்ளது. நாம் வேதத்திற்கு தகவல் மற்றும் அறிவை தேடி போகிறோம், அது சரி தான். ஆனால் அந்த தகவலையும், அறிவையும் கொண்டு என்ன செய்யபோகிறோம் என்பது தான் கேள்வி? வேதாகம வியாக்கியானம் என்பது வாசித்தல், கவனித்தல், புரிந்துக்கொள்ளுதல் மற்றும் வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ்தல். வேதத்தை வாசிக்கும் போதும், படிக்கும் போதும், நாம் வாசித்த வேத பகுதியை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். வேத ஆராய்ச்சியின் நோக்கம் தலை அறிவு அல்ல, இருதய மாற்றம். இருதய மாற்றத்தின் முலமாக மட்டுமே விசுவாசி ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய முடியும். ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது வேதத்தை அறிவதினால் மாத்திரம் வருவதில்லை, வேதத்தை வாழ்வில் நடைமுறைபடுத்தும் போது முதிர்ச்சியடைகிறோம் [கொலோ 1:28, 1பேதுரு 2:2,3, 1கொரிந்தியர் 8:1, யோவான் 5:39,40] வ-40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.வேதாகம வியாக்கியானம் வேத ஆராய்ச்சியின் இரண்டாம் படி, அது மிகவும் முக்கியமான படி. வேத வியாக்கியானம் நடைமுறை கொள்கைகளை கொண்டுவர அடிப்படையமானது. சரியான முறையில் வியாக்கியானம் செய்யவில்லை என்றால், தவறான முறையில் வேத சத்தியத்தை நடைமுறை கொள்கைகளாக கொண்டுவருவோம். நீங்கள் எப்படி வேதத்தை வியாக்கியானம் செய்கிறீர்களோ அப்படிதான் உங்கள் நடத்தையும், உங்களை சார்ந்தவர்களிடத்திலும் காணப்படும். ஆகவே, வேதத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேதாகம வியாக்கியானம் முக்கியமானதாய் இருக்கிறது.