தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான  வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு,

    1.  வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும்.
    2. வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும்.
    3. பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க வேண்டும்.
    4. வேதத்தை கிராமமாய் வாசிக்க வேண்டும்.
    5. வாசித்த வேதபகுதியை நினைவில்கொள்ள உழைக்க வேண்டும்.
    6. நீங்கள் வாசித்த வேத பகுதியை திரும்ப நினைத்து பார்க்க வேண்டும். 
    7. தாழ்மையுள்ள இருதயத்துடன் வேதத்தை வாசிக்க வேண்டும். 
    8. கொடுக்கப்பட்ட வேத வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். 
    9. வேதபுத்தகத்தை அவமதிக்ககூடாது.
    10. ஆழமான அன்போடு வேத வார்த்தையினிடத்தில் வா.
    11. வேதத்தை வாழ்வில் பயிற்றுவி.
    12. வேத பகுதிகளில் சொல்லப்பட்ட வார்த்தைகள், வாக்குத்தத்தங்கள்,ஞான போதனைகள், கட்டளைகளை கவனியுங்கள். 
    13. நீங்கள் வாசித்த வேத பகுதியோடு உங்களை ஒப்பிடுங்கள். 
    14. சில வேத பகுதிகள் உங்களோடு குறிப்பாக பேசும்போது அதை கவனமாய் எடுத்துக்கொள்ளுங்கள். 
    15. வாசிக்கிற வேத பகுதியை ஆசீர்வாதமாக்கி தர ஜெபிக்கவேண்டும்.