வாழ்வின் பாதுகாப்பு இயேசு மட்டுமே

இந்த கட்டுரை யார் இந்த யோவான் மாற்கு என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம். முதலாம் பாகத்தில் யோவான் மாற்கு பற்றிய முன்னுரையை நாம் வாசித்தோம். நாம் இப்பொழுது மாற்குவின் வாலிப காலத்தின் நிகழ்வுகளில் தேவன் எப்படி செயல்பட்டார் என்று வாசிக்கயிருக்கிறோம்.

மாற்கு ஒரு வாலிபனாக ….!

புதிய ஏற்பாட்டில் மாற்கு 14:50-52 வசனங்களில் மட்டுமே மாற்க்கின் வாலிப கால நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. வாசிப்போம் மாற்கு 14:50-52

    1. அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
       ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களைவிட்டு ஓடிப்போனான்.

இந்த வசனங்கள் நமக்கு என்ன கற்றுத்தருகிறது என்பதை புரி

ந்துக்கொள்ள இந்த பகுதியின் பின்னணியை பார்ப்பது அவசியமாகயிருக்கிறது. மாற்கு 14ம் அதிகாரத்தில் இயேசுவும் 12 சீஷர்களும் திருவிருந்தில் பங்குபெற்ற பின்பு, கெத்செமனேக்கு போனார்கள். இயேசு கிறிஸ்து அங்கே தான் பட போகிற பாடுகளுக்காக ஜெபிக்கிறார். இந்த மாற்குவும் அவர்கள் பின்னே சென்று அங்கே நிகழ்ந்த எல்லா நிகழ்

வுகளையும் காண்கிறார். அவர் மெல்லிசான ஒரு போர்வையை மாத்திரம் தன் உடலில் சுற்றிக்கொண்டு இவைகளை ஒரு வாலிபனாக பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்படி பார்த்துக்கொண்டிருக்கும் போது தான் இயேசுவை பிடிக்க வந்தார்கள்.

இந்த சூழலில் தான் வசனம் 50 கூறுகிறது “அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்”.  இயேசுவை பிடித்த போது அவருடைய சீஷர்கள் எல்லாரும் ஓடிப்போனார்கள். இதையும் மாற்கு பார்த்துக்கொண்டே இருக்கிறார். கூட்டத்தில் நின்ற யாரோ ஒருவர் மாற்குவையும் அடையாளம் கண்டு, அவரை பிடிக்க வந்தார்கள், அவர்களிடமிருந்து தப்பி தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களைவிட்டு தன் வீட்டுக்கு ஓடிப்போனார்.

இந்த நிகழ்வு நமக்கு என்ன கற்றுத்தருகிறது?

முதலாவது, மாற்கு தாழ்மையாக தன்னுடைய பயத்தையும், இயேசுவை விட்டு ஓடினதையும் ஒத்துக்கொள்கிறார். மாற்குவும், மற்ற சீஷர்களை போலவே ஆவிக்குரிய கொளையாகயிருக்கிறார். இயேசுவை விட்டு ஓடினார். அதே நேரத்தில் இந்த தப்பி ஓடிய செயலானது தேவனுடைய பாதுகாப்பின் செயலாக இருக்கிறது. யோவான் 18:8ஐ வாசிக்கும் போது, இயேசு தன்னை பிடிக்க

வந்தவர்களை பார்த்து சொல்லுகிறார், இவர்களை போகவிடுங்கள். தேவன் தன் சீஷர்களை காப்பாற்றுகிறார். எவ்வளவு தான் விசுவாசத்தில் பலவீனமுள்ளவனாக இருந்தாலும் தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பை தருகிறார். மாற்கு ஒரு வாலிப சீஷன். சீஷர்கள் பயந்து ஓடிய நிலையில் இயேசு கிறிஸ்து கம்பீரமாக இருந்தார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்வளவு பலவீனமான விசுவாசமுள்ளவர்களாய் இருந்தாலும் தேவன் நம்மை ஆபத்திலிருந்து தன்னுடைய உயிரை கொடுத்து காப்பாற்றுகிறவராய் இருக்கிறார். மாற்கு தைரியமாக இரவில் இயேசுவை பின்தொடர்ந்தாலும், அவன் பயந்து தடுமாருகிறாவராக இருக்கிறார். இன்றைக்கு கூட நம்முடைய வாழ்வில் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தபோதிலும் அவருடைய பாதுகாப்பும் பராமரிப்பும் நம்மோடு இருப்பதினால் அவர் நம்மை விடுவித்துக் கொண்டே இருக்கிறார்.

    நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

இந்த உலகத்தில் அநேகர் கூறும் காரியம், இயேசுவின் மீது மிக பெரிய விசுவாசம் இருந்தால் தான் அவர் நமக்கு சாதகமாக இருந்து நம்மை விடுவிப்பார். மாற்குவின் வாழ்விலும் இயேசுவின் சீஷர்களின் வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்வு பலவீனமாயிருக்கும் போதும் தேவன் அவர்கள் காப்பாற்றுகிறார். இயேசு மட்டுமே நம் வாழ்வின் பாதுகாப்பு. ஆகவே அவரை பர்ரிக்கொள்ளுங்கள். தேவன் மாற்குவை காப்பாற்றினார், நம்மையும் இன்றும், என்றும் காப்பாற்றுகிறவராய் இருக்கிறார். மிக முக்கியமாக பாவத்தில் இருந்து காப்பாற்றுகிறார். இயேசு மட்டுமே நம்மை பாவத்திலிருந்து காப்பாற்ற முடியும், வேறே யாராலும் பாவத்திலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் காப்பாற்ற முடியாது. பாவத்திலிருந்து காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்துவை மட்டுமே விசுவாசி. இயேசு கிறிஸ்து மட்டுமே நம் ஆவிக்குரிய வாழ்விற்கும், சரீர வாழ்விற்கும் பாதுகாப்பை தருகிறவர்.