கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 10

தேவன் மனிதனை எவ்வாறு உருவாக்கினார்?

பதில்

தேவன் மனிதனை ஆணும் பெண்ணும் ஆக உருவாக்கினார். ஞானம், நீதி, பரிசுத்தம் என்னும் தனது சாயலோடும், மற்ற படைப்புகளை ஆளும் அதிகாரம் கொண்டவனாகவும் படைத்தார்.

வேத ஆதாரம்

ஆதியாகமம் 1:27 

    1. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

கொலோசெயர் 3: 10

    1. தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

ஆதியாகமம் 1:28

    1. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி,                                             சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல                                               ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
  •