கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 18

வீழ்ச்சியின் விளைவாக மனிதன் அடைந்த அவநிலை என்ன?

பதில்

வீழ்ச்சியின் விளைவாக, முழு மனுக்குலமும் தேவனுடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் கீழாகி, வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் மரணத்திற்கும் என்றென்றுமாய் நரக வேதனைக்கும் உட்பட்டது, தேவனோடிருந்த ஐக்கியத்தையும் இழந்து போனது.

வேத ஆதாரம்

1) ஆதியாகமம் 3:8 (பின்பகுதி)

  1. “தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.”

      ஆதியாகமம் 3:24 (முன்பகுதி)

  1. “அவர் மனுஷனைத் துரத்திவிட்டார்.”

2)  எபேசியர் 2:3

  1. “சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.”

3)  கலாத்தியர் 3:10  

  1. “நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.”

4)  ரோமர் 6:23 (முன்பகுதி)

  1. “பாவத்தின் சம்பளம் மரணம்.”

5)  மத்தேயு 25:41

  1. “அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.”