கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 17

மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா?

பதில்

மனிதன் வீழ்ச்சியுற்ற  போது, ஆதாமுடைய முதல் பாவமாகிய குற்ற உணர்வும், ஆதியில் கொண்டிருந்த நீதி இல்லாமையும், பொதுவான மூலப் பாவம் என்றழைக்கப்படுகிறது. மனித சுபாவம் முழுவதும் கறை படிந்திருக்கிற பாவநிலையைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தே எல்லா மீருதல்களும் புறப்படுகிறது. 

வேத ஆதாரம்

1)  ரோமர் 3:10 

    1.  “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை”.

2)  ரோமர் 5:19

  1. “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல,                        ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்”.

3)  எபேசியர் 2:1

  1. ” அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்”.

4)  சங்கீதம் 51:5

  1. “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”.

5)  மத்தேயு 15:19

  1. “எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்”.