கேள்வி-1

மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கம் என்ன?


பதில்:

மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கமாவது

1.தேவனை மகிமைப்படுத்தவும்

2. என்றென்றும் அவரில்
களிகூறவுமாகும்.


வேத ஆதாரம்:

  1. I கொரிந்தியர் 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும்,
    எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
  2. சங்கீதம் 73:25, 26 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார்
    உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.