கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்
கேள்வி- 20
தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்?
பதில்
தேவனுடைய குமாரனாயிருந்தவரும், மனிதனாக இருந்தவரும் தொடர்ந்து இவ்விரண்டு நிலையில் இருக்கிறவரும், ஒருவராய், என்றென்றுமாய் இருக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனால் தெரிந்து கொண்டவர்களின் ஒரே மீட்பர்.
வேத ஆதாரம்
1) 1 தீமோத்தேயு 2: 5
- “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.”
2) யோவான் 1:14
- “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.”
3) 1 தீமோத்தேயு 3:16 (பின்பகுதி)
- ” தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.”
4) கொலோசெயர் 2:9
- “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.”