கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 11

தேவனுடைய பராமரிப்பின் செயல்கள் யாவை?

பதில்

தேவனுடைய பராமரிப்பின் செயல்கள் என்பது 1) அவரின் மேன்மையான பரிசுத்தம், 2) அவரின் ஞானம், 3)அவரின் வல்லமை உள்ள பாதுகாப்பு மற்றும் 4) அவரின் அனைத்து படைப்பையும், அவைகளின் செயல்களையும் ஆள்வதாகும்.

வேத ஆதாரம்

சங்கீதம் 145: 17

    “கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம்                                                             கிருபையுள்ளவருமாயிருக்கிறார்”.

ஏசாயா 28: 29

     “இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில்                        மகத்துவமானவர்”.

எபிரெயர் 1:3

    “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே  நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி,  உன்னதத்திலுள்ள  மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்”.

நெகேமியா 9:6 (வசனத்தின் பின்பகுதி )

    “அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்”.

மத்தேயு 10:29

    “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் , அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”.