சுவிசேஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் வெற்றியையும் மகிழ்ச்சியையும்
கொண்டுவரும் செய்தி ஆகும். இந்த சுவிசேஷம் என்ற வார்த்தை புதிய
ஏற்பாட்டில் 75 முறைக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுவிசேஷம் என்ற வார்த்த்தை ஆங்கிலத்தில் “GOSPEL” என்றும் கிரேக்க
மொழியில் “evangelion” என்றும் அழைக்கப்படுகிறது.
சுவிசேஷ செய்தி என்பது கடவுள் இயேசு கிறிஸ்துவில் அனைவருக்கும்
இரட்சிப்பின் வழியை திறந்திருக்கிறார் என்ற செய்தியே வெற்றியையும்
மகிழ்ச்சியையும் கொடுக்கும் செய்தியாகும்.

இந்த சுவிசேஷ செய்தி என்பது இயேசு கிறிஸ்துவின் கன்னி பிறப்பு,
வாழ்வு, போதனை, பாடு,மரணம் மற்றும் உயிர்தெழுதலை மட்டுமே
உள்ளடக்கியதாகும். இயேசு கிறிஸ்து மட்டுமே இந்த செய்தியின் மையம்.
மனிதனுடைய அனுபவமோ, சாட்சியோ, உணர்வோ, சொப்பனமோ
சுவிசேஷ செய்தி அல்ல.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை மட்டுமே மையமாக வைத்து
கொடுக்கப்பட்டுள்ள செய்தியை தான் நாம் சுவிசேஷ புத்தகங்களாக
(மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) வாசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் கன்னி பிறப்பு, வாழ்வு, போதனை, பாடு,மரணம்
மற்றும் உயிர்தெழுதலை மட்டுமே உள்ளடக்கியிருக்கும் செய்தியை
விசுவாசிக்கும் போது தான் நித்திய ஜீவன் விசுவாசிக்காவிட்டால்
ஆக்கினைதீர்ப்பு மாற்கு 16:16 “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம்
பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.”