வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன?

பிரசங்கம் என்பது – தேவனால், தேவனுடைய மனிதன், தேவனுடைய ஜனங்களிடத்தில், தேவ ஆவியின் வல்லமையால், தேவனுடைய சத்தியத்தை (வார்த்தையை)கொண்டு செயலாற்றுவது.

தேவனின் வார்த்தையை தேவனின் ஆள்தன்மையோடு கொண்டு சேர்ப்பது தான் பிரசங்கம் என்று Mark Dever கூறுகிறார். அறிவித்தல்அல்ல, விளக்கபடுத்துதல் அல்ல, உபதேசித்தல் அல்ல, உணர்ச்சி வசபடுத்துதல் அல்ல, மக்களை ஆச்சர்யத்திற்குள்ளாக வழிநடத்துவதல்ல,  அவர்களின் முழு ஆள்தன்மையையும் கிறிஸ்துவுக்குள்ளாய் மாற்றமடைய செய்வது தான் பிரசங்கம்.

Preaching is not a speaking, it is a living.- பிரசங்கம் என்பது சத்தியத்தை பேசுவதல்ல, அதில் வாழ்வது. பிரசங்கம் என்பது பாவியான மனிதனை பரிசுத்த தேவனோடு எதிர்கொள்ள செய்வது ஆகும்.- மார்டின் லாய்ட் ஜோன்ஸ்.

பிரசங்கி பிரசங்க பீடத்தில் நின்றுகொண்டு தேவனுடைய வாயாக தான் இருக்கிறான் என்பதை ஒரு நொடியும் அவன் மறக்க கூடாது.

வேத வியாக்கியான பிரசங்கம் நான் செய்யவில்லை என்றால் திரித்துவ தேவனை கலங்க படுத்துகிறேன். தேவனின் வழிமுறையை நிராகரிக்கிறேன், கிறிஸ்துவின் அதிகாரத்தை அசட்டை செய்கிறேன், பரிசுத்த ஆவியானவரை செயல்பட விடாமல் கனவீனபடுதுகிறேன்.

வசனத்தின் வல்லமை என்பது ஆவியானவரை தவிர வேறு யாரிடமும் இல்லை. வார்த்தையை செய்தியாக அவரால மட்டுமே மாற்ற முடியும். ஆவியானால் நடத்தபடாதவன், அவரின் சத்தத்திற்கு கீழ்படியாதவனால் ஆவிக்குரிய காரியங்களை விளக்க படுத்த முடியாது. ஆவிக்குரிய காரியங்களை போதிக்க முடியாது. (யாக்.1:21)

வேத வியாக்கியான பிரசங்கத்தின் நோக்கம் என்ன?

1. பாவியை தாழ்மை படுத்துவது, (வீழ்ச்சியின் ஆழம்)

2. மீட்பருக்கு மகிமையை கொண்டுவருவது (கிறிஸ்துவின் சிலுவை)

3.பரிசுத்தத்தை மேம்படுத்துவது. ( தேவனின் சித்தம்) 

இவைகள் உங்களது பிரசங்கத்தில் உள்ளதா ? 

இன்றைய கால பிரசங்கங்கள் எப்படி உள்ளது? இதற்கு முற்றிலுமாக எதிரான நிலையைத்தான் திருச்சபைகளில் பார்க்கிறோம்.
பாவியை உயர்த்தி பேசுவது, கிறிஸ்துவை கனவீனபடுத்துவது, பரிசுத்தம் சீர்குலைவது.