Blog

29 Nov
0

வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன?

வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன?

பிரசங்கம் என்பது – தேவனால், தேவனுடைய மனிதன், தேவனுடைய ஜனங்களிடத்தில், தேவ ஆவியின் வல்லமையால், தேவனுடைய சத்தியத்தை (வார்த்தையை)கொண்டு செயலாற்றுவது.

தேவனின் வார்த்தையை தேவனின் ஆள்தன்மையோடு கொண்டு சேர்ப்பது தான் பிரசங்கம் என்று Mark Dever கூறுகிறார். அறிவித்தல்அல்ல, விளக்கபடுத்துதல் அல்ல, உபதேசித்தல் அல்ல, உணர்ச்சி வசபடுத்துதல் அல்ல, மக்களை ஆச்சர்யத்திற்குள்ளாக வழிநடத்துவதல்ல,  அவர்களின் முழு ஆள்தன்மையையும் கிறிஸ்துவுக்குள்ளாய் மாற்றமடைய செய்வது தான் பிரசங்கம்.

Preaching is not a speaking, it is a living.- பிரசங்கம் என்பது சத்தியத்தை பேசுவதல்ல, அதில் வாழ்வது. பிரசங்கம் என்பது பாவியான மனிதனை பரிசுத்த தேவனோடு எதிர்கொள்ள செய்வது ஆகும்.- மார்டின் லாய்ட் ஜோன்ஸ்.

பிரசங்கி பிரசங்க பீடத்தில் நின்றுகொண்டு தேவனுடைய வாயாக தான் இருக்கிறான் என்பதை ஒரு நொடியும் அவன் மறக்க கூடாது.

வேத வியாக்கியான பிரசங்கம் நான் செய்யவில்லை என்றால் திரித்துவ தேவனை கலங்க படுத்துகிறேன். தேவனின் வழிமுறையை நிராகரிக்கிறேன், கிறிஸ்துவின் அதிகாரத்தை அசட்டை செய்கிறேன், பரிசுத்த ஆவியானவரை செயல்பட விடாமல் கனவீனபடுதுகிறேன்.

வசனத்தின் வல்லமை என்பது ஆவியானவரை தவிர வேறு யாரிடமும் இல்லை. வார்த்தையை செய்தியாக அவரால மட்டுமே மாற்ற முடியும். ஆவியானால் நடத்தபடாதவன், அவரின் சத்தத்திற்கு கீழ்படியாதவனால் ஆவிக்குரிய காரியங்களை விளக்க படுத்த முடியாது. ஆவிக்குரிய காரியங்களை போதிக்க முடியாது. (யாக்.1:21)

வேத வியாக்கியான பிரசங்கத்தின் நோக்கம் என்ன?

1. பாவியை தாழ்மை படுத்துவது, (வீழ்ச்சியின் ஆழம்)

2. மீட்பருக்கு மகிமையை கொண்டுவருவது (கிறிஸ்துவின் சிலுவை)

3.பரிசுத்தத்தை மேம்படுத்துவது. ( தேவனின் சித்தம்) 

இவைகள் உங்களது பிரசங்கத்தில் உள்ளதா ? 

இன்றைய கால பிரசங்கங்கள் எப்படி உள்ளது? இதற்கு முற்றிலுமாக எதிரான நிலையைத்தான் திருச்சபைகளில் பார்க்கிறோம்.
பாவியை உயர்த்தி பேசுவது, கிறிஸ்துவை கனவீனபடுத்துவது, பரிசுத்தம் சீர்குலைவது.


Read More
29 Nov
0

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

இரட்சிப்பின் ஏழு நிச்சய அடையாளங்கள்.

உண்ம்மையான் இரட்சிப்பில் வெளிப்படும் வெளி அடையாளங்கள் உண்டா? ஆம் உண்டு. நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1யோவான், ரோமர் 8ம் அதிகாரத்தில் இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ நடைமுறையில் காணப்படும் அடையாளங்களை தெளிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றன. பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிகப்பட்டவர்களின் மனப்பான்மையிலும், வாழ்க்கையிலும் காணப்பட்ட மாற்றத்தை அப்போஸ்தலர் நடபடிகள் 2:37-38,41-47 ஆகிய வசனங்களில் நாம் காண்கிறோம்.


37. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.42. அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.43. எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.44. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.45. காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.46. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.


மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

  1. பாவத்தை குறித்த உணர்வு
  2. வேதத்தை விளங்கிக் கொள்ளுதல்
  3. கிறிஸ்தவ ஐக்கியம்
  4. ஜெபத்தில் ஆர்வம்
  5. புதிய இருதயம்
  6. இரட்சிப்பைக் குறித்த ஆரம்ப நிச்சயம் 
  7. சாத்தானின் தாக்குதல்

பீட்டர் மாஸ்டர்ஸ் அவர்கள் எழுதின புத்தகத்தின் சுருக்கம். இந்த புத்தகம் புதிதாய் இரட்சிக்கப்பட்ட நபர்களுக்கும், இரட்சிப்பின் நிச்சயத்தை பற்றிய கேள்வியோடு வாழும் நபர்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக அமையும். 

இந்த புத்தகத்தை பெற்று வாசிக்க விரும்புவோர் எங்களது Email-க்கு உங்களது முகவரியை அனுப்பவும்.

Email Id: ebcmdu@gmail.com

Read More
29 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 9

படைப்பின் கிரியை என்றால் என்ன?

பதில்

தேவன் தனது வார்த்தையின் வல்லமையினாலே ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் நல்லவைகளாக ஆறு நாளைக்குள்ளாகவேப் படைத்தார்.

வேத ஆதாரம்

ஆதியாகமம் 1:1 

    ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

எபிரெயர் 11:3

    விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

யாத்திராகமம் 20:11

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர்  ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

 

 

Read More
27 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி – 8

தேவன் தனது ஆணையை எவ்வாறு செயலாற்றுகிறார்?

பதில்

படைப்பு மற்றும் பராமரிப்பின் செயல்களை கொண்டு தேவன் தன்னுடைய ஆணையை செயலாற்றுகிறார்.

வேத ஆதாரம்

வெளிபடுத்தல் 4:11

கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

தானியேல் 4:35

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

 

Read More