Blog

25 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 7

தேவனுடைய ஆணை யாது?

பதில்

தேவனுடைய சுயசித்தத்தின் ஆலோசனையின்படியான அவருடைய நித்திய நோக்கத்தின்படியும், நடக்கின்ற யாவும் அவரால் முன் தீர்மானிக்கப்பட்டபடியால் அவைகள் அவருடைய மகிமைக்கென்று செய்ய வேண்டும் என்பதே தேவனுடைய ஆணை.

வேத ஆதாரம்

எபேசியர் 1:11-12

மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.

 

Read More
25 Nov
0

சங்கீதம் 139

சங்கீதம் 139

இந்த சங்கீதத்தை தாவீது ஜெப சிந்தனையோடு எழுதியிருக்கிறார். இதில் அவர் தேவனின் சர்வ ஞானத்தையும், தேவனின் எங்குமிருத்தலையும் என்ற குணாதிசயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் எல்லாம் அறிந்தவர் அதேவேளையில் எங்கும்-இருப்பவர். இந்த சங்கீதத்தில் வாசிக்கும் போது தேவன் தான் படைத்த ஒவ்வொன்றையும் மிக அருகில் இருந்து அறிந்தவர் என்று கற்றுத்தருகிறது.

  1. தேவன் நம்மை மிக நெருக்கமாக அறிந்தவர் என்பதை போதிக்கிறது

சங்கீதம் 139:1, 3 வசனங்கள் தேவன் நம் பழக்கங்களையும், செயல்களையும் அறிந்தவர் என்று கூறுகிறது.

சங்கீதம் 139:2- தேவன் நம் சிந்தனைகளை அறிந்தவர் என்று கூறுகிறது.

சங்கீதம் 139:7-10 வசனங்கள் தேவன் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை அறிந்தவர் என்று கூறுகிறது.

  1. தேவன் நம்மை ஓர் நோக்கத்திற்காக உண்டாக்கினார் என்பதை போதிக்கிறது.

சங்கீதம் 139:14 – நான் ஒரு படைப்பு, நான் எப்படி உருவானேன் என்று கூறுகிறது.

மனிதன் படைக்கப்பட்டதே தேவனை ஆராதிக்க, அவரை அறிய அவரை விசுவாசித்து, பின்பற்ற வேண்டும் என்பதற்காக தான். இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவரின் சிலுவை மரணத்தையும் உயிர்தெழுதலையும் விசுவாசிக்க வேண்டும், அவர் மூலமாய் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

  1. தேவன் ஆளுகிறவர் என்று சங்கீதம் 139:16 போதிக்கிறது.

நாம் ஆராதிக்கிறவர் அனைத்தையும் ஒவ்வொரு தனி மனிதனையும் காண்கிறவர், ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்நாளை அறிந்தவர். தேவனுடைய திட்டம் எதுவுமே மாறாது. அவருக்கு இந்த உலகில் நிகழும் அநீதி, அக்கிரமம், அநியாயம் உன் வாழ்வில் நடந்தது, நடந்துக்கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் தேவனுடைய சித்தமில்லாமல் நிகழாது. சங்கீதம் 135:6, 115:3. இதை வாசிக்கும் போது தேவன் ஆளுகிறார் அவரின் சித்தமில்லாமல் இந்த உலகில் எதுவும் நிகழாது.

  1. தேவன் உன் அருகில் இருக்கிறார் என்று போதிக்கிறது. சங்கீதம் 139:7 “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?”

பிசாசு நமது எதிரி நமக்கு சொல்வது உனக்கு யாருமில்லை. நீ தனி ஆள் என்று. ஒருவேளை மருத்துவமனையில், பிரச்சனையில், யாவராலும் கைவிடப்படும் நிலையில் இருக்கிறாய் என்ற உணர்வை கொண்டுவருவான். அப்படிப்பட்ட நிலையில் நீ பயப்பட அவசியமில்லை. தாவீது இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த நபர் கூறுகிறார். அனைத்து இடங்களிலும் தேவன் இருக்கிறார். தேவன் இல்லாத இடம் ஏதுமில்லை என்பதை அறிந்துக்கொள். அவர் உன் அருகில் இருக்கிறார்.

  1. தேவன் நியாதிபதி என்று சங்கீதம் 139:19-22 போதிக்கிறது. தேவன் பாவிகளை நியாயம் தீர்க்கிரவராய் இருக்கிறார். மனந்திரும்பாமல் தன் பாவத்தை உணராமல் தொடர்ந்து சுவிசேஷத்திற்கு செவிகொடாதவர்களை தேவன் நியாயம்தீர்க்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் பாவிகள் மீது சினம்கொள்ளுகிற தேவன். பாவிகளை நரகத்தில் தள்ளுவார்.
  2. ஜெபத்தை குறித்து சங்கீதம் 139:23-24 போதிக்கிறது. பயத்திலும், திகிலிலும் வாழ்வும், எதிர்காலம் எப்படியோ, மரணபடுக்கையில், பிரச்சனையில் உள்ளவர்களுக்கு தாவீது தேவனின் சர்வஏகாதிபத்தியத்தையும் அவரின் ஞானத்தையும், உன் அருகில் இருக்கிறார் என்பதையும் கூறி ஆறுதல்படுத்துகிறார்.

 

இப்படிப்பட்ட தேவனை அறியாவிட்டால் நீ உன்னை பாவி என்று உணர்ந்து, மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அவர் உன் ஆண்டவரும் இரட்சகருமாய் இருக்கிறார். அவரே உன் தேவன் என்று இந்த சங்கீதம் நமக்கு போதிக்கிறது.

Read More
23 Nov
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 6

தேவத்துவத்தில் தேவன் எத்தனை ஆள் தன்மை கொண்டவராக உள்ளார்?

பதில்:

தேவத்துவத்தில் ஒரே தேவன் மூன்று ஆள் தன்மை கொண்டவராக உள்ளார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராக செயல்படுகிறார். இந்த மூன்று தன்மைகளும் ஒரே தேவனில் உள்ளன. அவர் வல்லமை மற்றும் மகிமையிலும் சமமாகவே ஒரே சாராம்சத்தோடு உள்ளார். 

வேத ஆதாரம்

மத்தேயு 28:19 

    ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

2கொரிந்தியர் 13:14

        கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

 

Read More
22 Nov
0

சங்கீதங்களை வாசிப்பதற்கான 15 காரணங்கள்

சங்கீதங்களை வாசிப்பதற்கான 15 காரணங்கள்

  1. நமக்கு ஆறுதல் தேவைப்படும்போது-   சங்கீதம் 23
  2. தேவனை மிக நெருக்கமாக சந்திக்க விரும்பும்போது-   சங்கீதம் 103
  3. புதிய ஜெபத்தை ஏறெடுக்க விரும்பும்போது-   சங்கீதம் 136
  4. ஓய்வுநாளில் வாசிக்க-   சங்கீதம் 92
  5. தேவனை அதிகமாய் அறிந்துக்கொள்ள-   சங்கீதம் 24
  6. நம்மை முழுமையாக புரிந்துக்கொள்ள-   சங்கீதம் 8
  7. நாம் ஒவ்வொரு நாளும் எப்படி தேவனிடம் வரவேண்டும் என்பதை அறிய சங்கீதம் 5
  8. பாவங்கள் மன்னிக்கப்பட-   சங்கீதம் 51
  9. தகுதியை உணர –  சங்கீதம் 139
  10. நாம் ஏன் வேதத்தை வாசிக்க வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள சங்கீதம் 119
  11. தேவனை துதிக்க-   சங்கீதம் 145
  12. தேவன் அனைத்தையும் முழுமையாக ஆளுகிறார் என்பதை அறிந்துக்கொள்ள சங்கீதம் 146
  13. தேவனுக்கு நன்றி சொல்ல –  சங்கீதம் 136
  14. தேவனை பிரியப்படுத்த –  சங்கீதம் 15
  15. தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள – சங்கீதம் 104

கர்த்தருடைய வார்த்தை எழுதபட்டதின் நோக்கம் வேதத்தை படிக்க, புரிந்துகொள்ள, நடைமுறைப்படுத்த. சங்கீதங்க புத்தகங்கள் நம்மை நேரடியான நடைமுறைக்கு வழிநடத்துகிறது. 

நாம் சங்கீதங்களை வாசிக்கும் போது அது நமது தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு நெருக்கமாக தொடர்புடையது என்பதை அறியலாம். இவைகள் நமது ஆழமான காயங்களையும் ஏக்கங்களையும், சிந்தனைகளையும் ஜெபமாக கொண்டுள்ளது. ஆகவே நாம் சங்கீதங்களை வாசிக்க வேண்டும். அவைகள் நம்மை ஆறுதல்படுத்த, தேற்ற, அரவணைக்க பரிசுத்த ஆவியான தேவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இது தேவனுடைய வார்த்தை. இதை வாசிப்போம்! சிந்திப்போம்! கிறிஸ்துவினிடம் திரும்புவோம்!

Read More