Blog

02 Sep
0

மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள்

I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள் 

அதிகாரம் 1

  1. ஒளியில் நடப்பவன்  [Iயோவான் 1:6]
  2. ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன்  [Iயோவான் 1:7]
  3. அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன்  [Iயோவான் 1:8]
  4. அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10]

 

அதிகாரம் 2

  1. தொடர்ச்சியாக கட்டளைகளை கைக்கொள்பவன்   [Iயோவான் 2:3, 3:24]
  2. தொடர்ச்சியாக வசனத்தை கைக்கொள்பவன்   [Iயோவான் 2:5]
  3. அவர் நடந்ததுபோல தானும் நடப்பவன்  [Iயோவான் 2:6]
  4. சகோதரனை பகைக்காதவன்  [Iயோவான் 2:9]
  5. சகோதரனிடத்தில் அன்பு கூறுபவன் [Iயோவான் 2:10, 3:10]
  6. உலகத்தில் அன்பு கூறாதவன் [ Iயோவான் 2:15]
  7. உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறாதவன்  [Iயோவான் 2:15]
  8. அவன் தேவனின் சித்தத்தின்படி செய்பவன் [Iயோவான் 2:17 ]
  9. அவன் கிறிஸ்தவன் சரீரத்தில் நிலைத்திருப்பவன்  [Iயோவான் 2:19]
  10. சுவிசேஷத்தின் சத்தியத்தை அறிந்ததினால் அபிஷேகம்பெற்றவன் [Iயோவான் 2:20, 21]
  11. அவன் இயேசுவை மேசியா என்று அறிந்தவன் [Iயோவான் 2:22, 5:1]   
  12. கிறிஸ்துவில் நிலைத்திருப்பவன் (செடியும் – கொடியுமாக யோவான் 15)   [Iயோவான் 2:27-28]
  13. அவன் தொடர்ச்சியாக நீதியை பயிற்சிப்பவன் [Iயோவான் 2:29; 3:10]

 

அதிகாரம் 3

  1. அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல் தன்னையும் சுத்திகரித்துக்கொள்பவன்  [Iயோவான் 3:3.]
  2. தொடர்ச்சியாக பாவம் செய்யாதவன் [Iயோவான் 3:6; 5:18.]
  3. அவர் நீதியுள்ளவராய் இருக்கிறதுபோல தானும் நீதியுள்ளவராய் இருக்கிறான் [Iயோவான் 3:7.]
  4. அவன் தேவனால் பிறந்தபடியால் பாவம் செய்யான். ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் இருக்கிறது [Iயோவான் 3:9.]
  5. சகோதரனிடம் அன்பு கூறுபவன் [Iயோவான் 3:14.]
  6. வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூறுபவன் [Iயோவான் 3:18-19.]
  7. பரிசுத்த ஆவியானவர் நம்முள் இருப்பதினால் இரட்சிப்பின் நிச்சயத்தை கொண்டவன் [Iயோவான் 3:24, 4:2]  

 

 அதிகாரம் 4

  1. அவன் மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கைபண்ணுகிறவன் [Iயோவான் 4:2]
  2. அவன் அந்திகிறிஸ்துவின் ஆவியை அறிந்தவன் [Iயோவான் 4:3-4]
  3. அவன் அப்போஸ்தல உபதேசத்தை கேட்டு பெற்றுக்கொண்டவன் [Iயோவான் 4:6]
  4. தேவ அன்புள்ளவன் [Iயோவான் 4:7-8]
  5. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுபவன் [Iயோவான் 4:15]
  6. தேவ அன்பில் நிலைத்திருப்பவன் [Iயோவான் 4:16]
  7. அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அன்பு கூறுகிறோம் [ Iயோவான் 4:19]

அதிகாரம் 5

  1. அவன் தேவனால் பிறந்தவன் [Iயோவான் 5:1]    
  2. உலகத்தை ஜெயித்தவன் [Iயோவான் 5:4]
  3. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பவன் [Iயோவான் 5:5 ]

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இதை வாசித்த உங்கள் வாழ்வில் இப்படிப்பட்ட குணாதிசயங்கள் காணப்படுகிறதா?

இல்லையென்றால் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள்.

 

Read More
29 Aug
0

நீதிமானின் வழியும், துன்மார்க்கனின் வழியும்

சங்கீதம் 1:6
“கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்.”

 

அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்:

 

பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். எபிரேய மொழியில் இன்னும் தெளிவாக, “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்துகொண்டிருக்கிறார்” என்று இருக்கிறது. “அவர் தொடர்ந்து அவர்களுடைய வழியை காண்கிறவராக இருக்கிறார். ஒருவேளை சில நேரங்களில் அந்த வழி மூடு பனியாலும் இருளாலும் நிறைந்திருந்தாலும், ஆண்டவர் அதை அறிந்திருக்கிறார்” (ஸ்பர்ஜன்). அறிந்திருக்கிறார் என்றால் உன்பேரில் அவர் மிக நெருக்கமாகவும், அன்பாகவும், இருக்கிறார் என்று பொருள். உனக்கும் ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவு சரியான இருக்கிறது என்று பொருள். நீதிமான்களின் வழி என்பது தெய்வபக்தியான மனிதனுடைய வழி. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருக்கிறவனுடைய வாழ்க்கைதான் ஆசீர்வாதமாக இருக்கும். அவன்தான் பாக்கியவான். (வசனங்கள் 1-2)

 

ஆ. துன்மார்க்கனுடைய வழியோ அழியும்:

 

தெய்வபக்தியற்ற ஒரு துன்மார்க்கனுடைய வழி எப்படி இருக்குமென்றால் அக்கிரமம் நிறைந்ததாகவும், அழிவுக்கே நேரே அணிவகுத்துச் செல்லுகிறதாகவும் இருக்கும். அக்கிரமக்காரனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால், அவன் தேவனுடைய கட்டளைகளை தள்ளுகிறவனாகவும், மீறுகிறவனாகவும் இருக்கிறான். அவனுடைய அந்த விசாலமான வழி, அந்த வழி அவனுக்கு கொடுக்கும்  அவன் தற்காலிகமாக சௌகரியமாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் கடைசியில் துன்மார்க்கர்களுடைய முடிவு அழிவு. அதைத்தான் மத்தேயு 7:23இல் வாசிக்கிறோம், அங்கே இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிறம செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.”

நீதிமான் என்பவன் மன்னிக்கட்ட மனுஷன்.

 

சங்கீதம் 32:1-2 சொல்லுகிறது,
“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,
எவனுடைய பாவம் மூடப்பட்டதோ,
அவன் பாக்கியவான்.
எவனுடைய அக்கிரமத்தைக்
கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ,
எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ,
அவன் பாக்கியவான்.”

Read More
26 Aug
0

தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான எதிர்காலம்

சங்கீதம் 1:5
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்,
பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

அ. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்:

துன்மார்க்கன் பதரைப்போல் “எடை”யற்றிருப்பதால், நியாயத்தீர்ப்பில் வெறுங்கையாய் இருப்பார்கள். தானியேல் புத்தகத்தில் பெல்ஷாத்சாரைக் குறித்து சொன்னது போலவே “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக்காணப்பட்டாய்” துன்மார்க்கனுடைய நிலை இருக்கும் (தானியேல் 5:27).

 

ஆ. பாவிகள் நீதிமான்களின் சபையிலும்:

இதுவே பாவியின் எதிர்காலம். நீதிமான அடிகிற அதே மகிமையான எதிர்காலத்தில் பாவிகள் பங்கடைவதில்லை. நிகழ்காலத்திலுந்தான். அவர்கள் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருக்கும் பட்ச்சத்தில் நீதிமான்களின் சபையில் பங்கடைய முடியாது.

சங்கீதக்காரம் சொன்னான், என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். (சங் 86:2)

Read More
26 Aug
0

தெய்வபக்தியற்ற மனிதனின் வழி

சங்கீதம் 1:4
துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான நிலை

அ.  துன்மார்க்கரோ அப்படியிராமல்:

நீதிமானைக் குறித்த ஒவ்வொரு உண்மைகளும் – இலையுதிராதிருக்கிற மரம், தொடர்ச்சியான ஜீவனும் போஷிப்பும், கனிதரும் வாழ்க்கை, செழிப்பு – இவையெல்லாம் துன்மார்க்கனைக் குறித்ததல்ல. ஒருவேலை சில சமயங்களில் மேற்கூறிய இவையெல்லாம் துன்மார்க்கனுடைய வாழ்க்கையிலும் நிறைவாக இருப்பதுபோல் கூட தோன்றும். ஆனால் அப்படி இருப்பதில்லை. இவைகளில் சில சில மணித்தியாலங்கள் துன்மார்க்கனுடைய வாழ்க்கையில் இருக்கும். இருந்தும் அவை உண்மையில் அவனுடைய வாழ்க்கையில் இல்லை என்பதே நிஜம். 

ஆ. காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்ப்போல் இருக்கிறார்கள்:

பதர் என்பது தானியத்தில் மேல் ஒட்டியிருக்கும் சிறிய தொலி. அந்த தானியம் மாவாக மாற்றப்பட வேண்டுமானால் அந்த உமிகள் விலக்கப்படவேண்டும். அப்படி தானியத்திலிருந்து உமியைப் பிரித்தெடுக்க தானியத்தைக் கொத்தாக காற்றில் வீசினால் போதும்; உமிகளுக்கு சொல்லக்கூடிய அளவு எடை இல்லாமையால் அவை பிரிந்து பறந்துபோய்விடும். இப்படித்தான் துன்மார்க்கனுடைய வாழ்க்கை நிலையற்றதாக இருக்கும்.

ஸ்பர்ஜன் ஓரிடத்தில் சொன்னார், பதர் என்பது “உள்ளார்ந்த முறையில் பயனற்றதாகவும், செத்ததாகவும், உதவாததாகவும், எளிதாக சிதறி ஓடுகிறதாகவம்” இருக்கும் என்று. ஒரு மரத்திற்கும் பதருக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு.

Read More