Blog

08 Aug
0

பாவம் ஏன் கொடூரமானது?

 

ரோமர் 3 : 21- 26

முன்னுரை:

இன்றைக்கு இந்த உலகத்தில் நமக்கு தேவனைப் பற்றிய செய்தி அவசியமாக இருக்கிறது தேவனைப் பற்றிய செய்தி தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்ளவும் மனிதர்களாகிய நாம் யார்? நம்முடைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ளவும் அவசியமாக இருக்கிறது.

வேதம் கூறுகிறது ரோமர் 3:23ல் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி”. இந்த தீர்ப்பு நம் எல்லார் மேலும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பில் இருந்து நாம் நம்முடைய பாரம்பரியத்தினாலும், நற்செயல்களினாலும் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. ஏன் இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் நாம் எல்லாரும் பாவஞ்செய்து தேவனுடைய விரோதிகளாக இருக்கிறோம். பாவம் என்பது தேவனுடைய கட்டளைகளை மீறுவது 1யோவான் 3:4 “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.”. பாவம் கொடூரமானது. ஆனால் இன்றைக்கு நம்மால் இந்த பாவத்தை அவ்வளவு கொடூரமானதாக பார்க்க முடிவதில்லை. இன்றைக்கு இந்த உலகத்தில் பாவத்தை பண்ணுகிறோம், பாவத்தை சகித்துக்கொள்ளுகிறோம், பாவத்தை ஏற்றுக்கொள்ளுகிறோம் பாவத்தோடு இணைந்து வாழ்கிறோம். பொய் சொல்லுவது பாவமா? அவ்வளவு பெரிய பாவம் இல்ல, கெட்ட வார்த்தை பேசுவது பாவமா?, இச்சை, ஆபாச மொழிகள், கீழ்ப்படியாமை ஆகிய இவைகள் பாவமா?. இவையெல்லாம் யார் செய்யாமல் இருகிறாங்க சொல்லுங்கள்? இவையெல்லாம் செய்தால் தான் மனிதன் என்று பாவத்தை எற்றுக்கொள்ளுகிறோம் இணைந்து வாழ்கிறோம்.

வேதம் கூறுகிறது இவையெல்லாம் தேவனுக்கு விரோதமானது.

தேவனுக்கு விரோதமானது என்பது அது கொடூரமானது, பாவம் கொடூரமானது என்பதை தெரியாததினால்தான் அதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம். சங்கீதம் 51:4 “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். தாவீது பாவம்செய்து என்ன சொல்லுகிறான் சங்கீதம் 51:4 தேவனுக்கு விரோதமாய் பாவம்செய்தேன். தாவீது செய்த பாவங்கள் விபச்சாரம், இச்சை, கொலை, இவைகள் மனிதனை பாதித்தாலும் முதலாவது நேரடியாக தேவனை பாதிக்கிறது.

பாவம் கொடூரமானது என்பது எப்போ புரியும் என்றால் நான் யாருக்கு விரோதமாய் பாவம் செய்கிறேன் என்பதை அறியும்போது தான் புரியும். தேவனின் மேன்மையான குணாதிசயங்களுக்கு எதிராக பாவம்செய்கிறேன் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.

தேவனைப்பற்றிய தெளிவான அறிவு இல்லை என்றால் பாவத்தைப்பற்றிய அறிவும் குறைவாகவே காணப்படும். தேவனைப்பற்றிய அறிவு தெளிவாக இருக்கிறபோது தான் பாவத்தைப் பற்றின கொடூரத்தன்மையும் தெளிவாக புரியும்.

தேவனைப்பற்றிய சரியான பார்வையும் அறிவும் மிக அவசியமானது. தேவனைப்பற்றிய அறிவு தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிகிறதிலிருந்து துவங்குகிறது. தேவனுடைய சில முக்கியமான குணாதிசயங்கள் மனிதனுடைய பாவம் எப்படிப்பட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது.

  1. தேவன் சர்வ அதிகாரி (சர்வ ஏகாதிபத்தியம்)

தேவன் சர்வத்தையும் தன்னுடைய அதிகாரத்திற்குள்ளாக வைத்திருக்கிறார். அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கிற அனைத்தும் நாம் பார்க்கிற பார்க்காத காரியங்களும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள்ளாக இருக்கிறது

சங்கீதம் 103:19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.

சங்கீதம் 115:3 “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்

சங்கீதம் 135:6 “வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.”

யோபு 23:13 “அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.”

எபேசியர் 1:12 “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே”

தானியேல் 4:35 “பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

சங்கீதம் 139:1,2-4, 7-10, 12, 13, 16 வாசிக்கவும்.

தேவன் நாம் செய்கிற ஒவ்வொரு பாவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு பாவமும் என்ன சொல்லுகிறது என்றால் எவ்வளவு பெரிய தேவனுக்கு நான் எதிரானவன்.

தேவன் சர்வ அதிகாரி என்பது என்ன கூறுகிறது என்றால் என்னுடைய எல்லா பாவமும் நான் தேவனுக்கு எதிரனாவன், பாவம் செய்கிற ஒவ்வொரு மனிதனும் சுய அழிவுக்கு நேராக சென்றுக்கொண்டு இருக்கிறான்.  யாத்திராகமம் 20:20 “மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.” தேவன் எதற்கு தன்னை வெளிப்படுத்தினார்? தம்மை பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காக, மிகப்பெரிய தேவனுக்கு முன்பாக நாம் செய்கிற பாவம் வந்து நிற்கிறது.

           2. தேவன் பரிசுத்தமுள்ளவர்:

தேவன் பரிசுத்தமுள்ளவர் என்று வேதம் தெளிவாய் அநேக பகுதிகளில் கூறுகின்றது

ஏசாயா 6:3 “ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்

வெளிப்படுத்தின விசேஷம் 4:8 “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

இந்த இரண்டு வசனங்களில் பரிசுத்தர் என்ற வார்த்தை மூன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மூன்று முறை கூறுவது மிக உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகிறது. தேவனின் பரிசுத்தத்தை தான் வேதம் மிக உயர்வாய் பேசுகிறது. அவருடைய பரிசுத்தத்தை சார்ந்து தான் மற்ற எல்லா குணாதிசயமும் அடங்கும்.

மத்தேயு 6:9 “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” தேவனுடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

ஆபகூக் 1:13 “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?”

1யோவான் 1:5 “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;

யாத்திராகமம் 15:11 “கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

1சாமுவேல் 2::2 “கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை

புரிந்துக்கொள்ள முடியாத பரிசுத்தமுடைய தேவன் எல்லாப் பாவமும் அவருக்கு அருவருப்பானது பாவம் என்பது தேவனுக்கு எரிச்சலையும், வெறுப்பையும் தூண்டக்கூடியது. உதாரணமாக ஆதாம் – ஏவாளின் பாவத்தில் தேவன் அவர்களை பொறுத்து போகவில்லை. தான் நேரடியாக படைத்த படைப்பு தானே என்று இரக்கப்படவில்லை. அதேபோல 2சாமுவேல் 6:3-7ல் ஆசாரியர்கள் தவிர வேறே யாரும் தொடக்கூடாத தேவனுடைய பெட்டியை தொட்டான், தொட்ட சமயத்திலே செத்தான். ஊசாவின் நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தாலும் தேவனுடைய பரிசுத்தத்ததை திருப்பதி செய்யவில்லை. நீங்களும் நானும் இவ்வளவு மகிமையான பரிசுத்த தேவனுக்கு முன்பாக பாவம் செய்துக்கொண்டிருக்கிறோம் என்ற அறிவு நான் செய்யும் பாவம் எவ்வளவு மோசமானது என்பதை காண்பிக்கும்.

  1. நீதியுள்ள தேவன்:

தேவன் எப்பொழுதுமே நீதியுள்ளவர்.  யோசுவா 7 ஆகானின் பாவம் நிச்சயமான தண்டனையை பெற்றுத்தந்தது

சங்கீதம் 7:9 “துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்

சங்கீதம் 119: 142 “உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.”

உபாகமம் 33:4 “பட்சபாதம் இல்லாத தேவன் நீதியுள்ள தேவன் எல்லா தீமையையும் வெறுக்கிறார் நீதியுள்ள தேவன் தண்டிக்கிறார்.

யோசுவா 7ம் அதிகாரத்தில் தேவன் எவ்வளவு நீதியாய் ஆகானை அவனுடைய பாவத்தின் நிமித்தம் தண்டிக்கிறார் என்பதை நாம் யோசுவா  7:1,11,12,19,20,25 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம்.  இப்படி நீதியுள்ள தேவனுக்கு விரோதமாய் பாவஞ்செய்கிறோம் இப்படியே போன நகரம் தான் ரோமர் 3:10 கூறுகிறது நீதிமான் ஒருவனுமில்லை. இப்படிப்பட்ட நிலையில் தேவனுடைய கோபத்திலிருந்து நான் எப்படி தப்பித்துக்கொள்ள முடியும்.

வேதம் மிக தெளிவாக தேவன் அன்புள்ளவர் என்பதையும் போதிக்கிறது. 1யோவான் 4:8 – தேவன் அன்பாகவே இருக்கிறார், 2 யோவான் 3:14  – தேவனுடைய அன்பு. தேவனுடைய அன்பை நாம் சவுலின் வாழ்வில் காணலாம்.

சவுல் யார் – சபைகளை துன்பப்படுத்தினவர் தேவனை சபித்தவர். தேவ கோபத்திற்கு மட்டுமே தகுதியையுடையவன். இப்படிப்பட்ட மனிதனை தேவன் அன்புகூர்ந்து
தேவன் தன்னை வெளிப்படுத்தினார், பாவத்தை உணர்த்தினார், மன்னிப்பைக் கொடுக்கிறார், தன்னைப்போல் மாற்றுகிறவர். இன்றைக்கும் அன்புள்ள தேவன். ஆகவே அவர் சிலுவையில் மரித்தார்  ரோமர் 3:24  “இலவசமாய் கிருபையினால் கிறிஸ்து இயேசுவினால் மீட்டு நீதிமானாக்கினார்.

இன்றும் தேவனுடைய அன்பு பெரியதாயிருக்கிறது, மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். தேவன் மகா பெரியவர் அவருக்கு முன்பாக பாவம் அருவருக்கத்தக்கது, நிச்சயமாய் தண்டனை உண்டு. பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

Read More
08 Aug
0

நீதிமான் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறான்?

சங்கீதம் 1:3

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,

தன் காலத்தில் தன் கனியைத் தந்து,

இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்;

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”

 

  1. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவனாய் இருப்பான்:

நீர்க்காலின் ஓரமாய் இருக்கிற மரம் தொடர்ச்சியான நீராதாரத்தை உடையதாக இருக்கும். அந்த மரத்திற்கு தேவையானது எப்போதும் கிடைப்பதால், அது வாடிப்போவதில்லை. நாம் எப்போதும் தேவைகளோடு இருப்போம் என்றால், நாம் நீர் கால்களின் ஓரமாய் நடப்பட்டு இருக்கிறோமா என்பதை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

இந்த மரமானது ஆளத்தில் வேரூன்றி திடமானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. அதுபோல, நீதிமானின் வாழ்வும் பலமானதாகவும் நிலைத்தன்மையுடனும் காணப்படும்.

  1. தன் காலத்தில் தன் கனியைத் தரும்:

நீதிமான் ஆவியின் கனிகளைத் தருகிறவனாக இருப்பான் (கலா 5:22-23). இந்த மரத்தில் இருந்து கனி இயல்பாகவே வரும். ஏனென்றால் அது நீர்கால்களின் ஓரமாய் நடப்பட்டு இருக்கிறது – தேவனுடைய வார்த்தை. இது ஜீவ ஆதாரத்தில் நிலைத்திருக்கிறது. இயேசு யோவான் 15:5ல் அவரில் நிலைத்திருப்பதன் மூலம் நாம் கனிகளைக் கொடுக்கிறவர்களாக இருப்போம் என்று கூறினார். கனிக்கும் ஒரு காலம் உண்டு. சிலர் ஆரம்பத்தில் நீதிமான்களாக நடக்கத் துவங்கும்போது உடனே கனிகொடாதபடியால் துவண்டுபோகிறார்கள். அவர்களுடைய காலத்தில் கனிகொடுக்கும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டியது அவசியம்.

தேவனின் கனித்தோட்டத்தில் ஒரு மரமும் கனி விளையாத மலட்டு மரம் அல்ல. எனினும், ஒரு ஆப்பிள் மரம் சில காலங்களில் கனி கொடாதது போல் அவை சில நேரங்களில் கனி இல்லாத நிலையில் இருக்கலாம்; ஆனால் அவை மீண்டும் செழித்துத் தோன்றும். (Trapp)

  1. அந்த மரத்தின் இலை உதிருவதில்லை:

பழுப்பு நிரமானதும், மரித்ததும், உளர்ந்ததுமான இலைகள் ஒரு மரம் மரித்துப்போனதற்கான (அ) உலர்ந்துபோனதற்கான அரிகுறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட அடையாளங்கள் நீதிமானில் இருப்பதில்லை. அவனுடைய இலைகள் ஜீவனுள்ளதாகவும் பசுமையானதாகவும் இருக்கும்.

  1. அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்:

நீதிமான் “தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்” மற்றும் அவன் செய்வதெல்லாம் அவனுக்கு செல்வத்தையும் சுகத்தையும் கொடுக்கிறது என்று பொருளல்ல. மாறாக, நீதிமானின் வாழ்வின் எல்லாவற்றிலும் இருந்தும் தேவன் நன்மையையும் ஆச்சரியத்தையும் உருவாக்குகிறார் (ரோமர் 8:28). கடினமான சூழ்நிலைகளிலும் கூட செழிப்பான காரியங்கள் உருவாக்கப்படுகிறது.

Read More
07 Aug
0

நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா? – ஜே. சி. ரைல்

இது கிறிஸ்தவ மார்கத்தில் பிரதான கேள்வியாக இருக்கிறது. இயேசு சொல்கிறார், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்று. – யோவான் 3:3

நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா? பொதுவாக இந்த கேள்விக்கு வரும் தவறான பதில், “நான் திருச்சபையில் சந்தா கட்டி உறுப்பினராக இருக்கிறேன்; ஆதலால் நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன்” என்பது. ஆயிரக்கணக்கான  பெயர் கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமம் விளக்கும் மறுபடியும் பிறந்திருப்பதற்கான அறிகுரிகளும் அடையாளங்களும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

மறுபடியும் பிறந்திருப்பதற்கான அறிகுறிகளும் அடையாளங்களும் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கவனமாக படியுங்கள். நான் அவைகளை 1 யோவான் நிரூபத்திலிருந்து காட்டுகிறேன்.

முதலில், அப். யோவான் சொல்கிறார், “தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான்” மறுபடியும் “தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான்” என்று (1 யோ 3:9,5:18).

ஒரு மறுபடியும் பிறந்த  (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன் பாவத்தை ஒரு தொடர்பழக்கமாக செய்துகொண்டிருக்க மாட்டான். அவன் இருதயபூர்வமாகவோ, சித்தங்கொண்டோ, முழு ஈடுபாடோடோ, ஒரு புதுப்பிக்கப்படாத மனிதனைப்போல பாவம் செய்துகொண்டிருக்க மாட்டான். அவன் செய்த செயல்கள் பாவமா, இல்லையா என்று யோசிக்காத, அதைக்குறித்து வருந்தாத ஒரு காலம் இருந்திருக்கும். அவனுக்கும் பாவத்திற்குமிடையே சச்சரவு ஏதுமின்றி நன்பர்களாக இருந்திருப்பார்கள். இப்போது அவன் பாவத்தை வெறுக்கிறான், அதை விட்டு ஓடுகிறான், அதை எதிர்த்துப் போராடுகிறான், அதை அவனைப் பிடித்த பெரிய கொள்ளை நோயாக பார்க்கிறான், பாவத்தின் இருத்தலின் சுமையைத் தாங்கமுடியாமல் முனகுகிறான், பாவத்தின் தூண்டுதலில் விழும்பொழுது புலம்புகிறான், அதிலிருண்டு ஒட்டுமொத்தமாக விடுதலையடைய வேண்டும் என்று ஏங்குகிறான். சுருங்கக்கூறின், பாவம் அவனை மகிழ்விக்காது, அதை அவன் அலட்சியப்படுத்துகிறான்; அது அவன் வெறுக்கும் அறுவருப்பான விஷயமாகிறது. இருந்தபோதும் அது அவனுக்குள் தங்குவதை அவனால் தடுக்க முடியாது. அவன் அவனில் பாவம் இல்லை என்று சொல்வானானால், சத்தியம் அவனுள் இராது (1 யோ 1:8). ஆனால், அவன் அதை மனதார வெறுக்கிறான், மற்றும் அவனுடைய பெரிய விருப்பம் பாவத்தை ஒருபோதும் செய்யக்கூடாது என்பதே. கெட்ட சிந்தனைகள் அவனுக்குள் எழுவதை அவனால் தடுக்க முடியாது, குற்றம் குறைவுகள் இருக்கலாம், அவனுடைய வார்த்தையிலும் செயலிலும். யாக்கோபு சொல்லியபடி, “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” (யாக் 3:2). ஆனால் அவன் உண்மையாக சொல்ல முடியும், அவனுடைய முழுதன்மையும் பாவத்திற்கு இசைவதில்லை மற்றும் காரியங்களுக்காக அன்றாடம் கடவுளுக்கு முன்பாக துன்பமும் துக்கமும் அடைகிறான்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

இரண்டாவதாக, யோவான் சொல்கிறார், “இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறார்.” (1 யோ 5:1)

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன், அல்லது புதுப்பிக்கப்பட்ட மனிதன், தன் ஆன்மா இயேசு கிறிஸ்து என்னும் ஒரே இரட்சகரால் தான் மன்னிக்கப்படக்கூடும் என்று அவன் ஆணித்தரமாக நம்புகிறான்; கிறிஸ்து இந்த நோக்கத்திற்காக பிதாவாகிய கடவுளால் நியமிக்கப்பட்ட தெய்வீக நபர் என்றும், அவரைத் தவிர மீட்பர் இல்லை என்றும் அவன் நம்புகிறான். தன்னில் உள்ள தகுதியின்மையைத் தவிற அவன் வேறு எதையும் பார்ப்பதில்லை. கிறிஸ்துவில் அவனுடைய முழு நம்பிக்கைக்கான அடித்தளத்தைக் காண்கிறான். அவரை விசுவாசிகிறபடியால், அவனுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டது என்று அவன் நம்புகிறான். கிறிஸ்து சிலுவையில் முடித்த செயல் மற்றும் மரணத்தின்மூலம், கடவுளுடைய பார்வையில் நீதியை அடைந்தவானாக எண்ணப்படுகிறான் என்று நம்புகிறான். அதன் காரணமாக மரணத்தையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து பதரான். அவனுக்கு ஒருவேலை பயமும் சந்தேகமும் இருக்கலாம். சில சமயங்களில் தனக்கு விசுவாசம் இல்லையோ என சந்தேகப்படுவதாகக் கூட சொல்லலாம். ஆனால் அவர் நித்திய வாழ்வின் நம்பிக்கையை அவரது சொந்த நற்குணத்தின் மீதோ, மனந்திரும்புதலிலோ, ஜெபங்களிளோ, ஊழியக்காரர் மீதோ, அல்லது சபையின் மீதோ வைக்கிறாரா என்று கேட்டுப்பாருங்கள். அவனிடம் கேளுங்கள், ஒருவேலை அவன் கிறிஸ்துவை கைவிட்டு, வேறு ஏதோ மத வழியில் தன் நம்புக்கையை வைப்பானா என்று. அதைச் சார்ந்து,அவன் கூறுவான், அவன் பெலவீனமோகவும் மோசமாகவும் உணரும்போதும், மண்ணுக்காக மாணிக்கமாகிய கிறிஸ்துவை ஒருபோதும் கைவிடமாட்டான். அதைச் சார்ந்து, தனக்கு கிறிஸ்து விலைமதிப்பற்றவர் என்றும், அவரே தனது ஆத்துமாவுக்கு ஏற்றவர் என்றும் அவன் கூறுவான். இதனை கிறிஸ்துவைத் தாண்டி வேறு எங்கும் கண்டுபிடிக்கமுடியாது என்று நன்கு உணர்ந்தவனாக கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வான்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

மூன்றாவதாக, யோவான் சொல்கிறார், “நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவன்” – 1 யோவான் 2:29

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன் என்பவன் பரிசுத்தமான மனிதன். அவன் கடவுளுடைய சித்தத்தின்படி வாழ முயற்ச்சிக்கிறான். கடவுளை பிரியப்படுத்தும் செயல்களை செய்யவும், கடவுளுக்குப் பிரியமில்லாத காரியங்களைத் தன்னைவிட்டு விலக்கக்கூடியவனாகவும் காணப்படுகிறான். தன் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், சிந்தையோடும், பெலத்தோடும் கடவுளை நேசிப்பதே அவனுடைய பிறதான குறிக்கோளாக காணப்படும். அதே போல, தன்னைப்போல் பிறனையும் நேசிக்கிறவனாக இருப்பான். கிறிஸ்துவை தன் முன் மாதிரியாகவும், இரட்சகராகவும் பார்க்கவேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாக இருக்கும். கிறிஸ்து கட்டளையிட்டவைகளை செய்கிறவனாக இருந்து தன்னை கிறிஸ்துவின் ஸ்நேகிதனாக காட்ட ஆவல் கொண்டவனாக இருப்பான். அவன் முழுமையற்றவன் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் சொல்வதற்கு முன் அதை அவன் ஒத்துக்கொள்வான். அவனுள் குடிகொண்டுள்ள சீர்கேட்டைக் குறித்து உணர்வுள்ளவனாக, அதன் அழுத்தத்தால்  முனகுகிறவனாக காணப்படுவான். அவனுள் ஒரு பாவ பிரமானம் இருந்து தொடர்ந்து கிருபைக்கு எதிராக யுத்தம் செய்வது, தேவனைவிட்டு தூரம் விலக்க முயற்ச்சிப்பதை கண்டுபிடிக்கிறான். பாவத்தின் இருத்தலை அவனால் தடுக்கமுடியாமல் இருப்பினும், அவன் அதற்கு இசைவதில்லை. எல்லாவிதமான குறைபாடுகள் காணப்பட்டாலும், அவனுடைய வாழ்வின் சராசரி வளைவுகளும், அவனுடைய வழியும் பரிசுத்தத்தை சார்ந்து காணப்படும் – அவனுடைய செயல்களில் பரிசுத்தம், அவனுடைய விருப்பங்களில் பரிசுத்தம், அவனுடைய பழக்கவழக்கங்களில் பரிசுத்தம். திசைமாற்றங்கள், வழிவிலகல்கள் இருப்பினும், காற்றை எதிர்த்து பயனிக்கும் தோனியைப்போல, அவனுடைய வாழ்க்கையின் போக்கு ஒரே திசையில், கடவுளுக்கு நேராக செல்லும். அவன் கடவுளுக்காக வாழ்வான். சில சமயங்களில் தான் ஒரு கிறிஸ்தவனா என்று கேள்வி எழுப்பும் சூழலுக்குள் விழுந்தாலும், பூர்வகால ஜான் நியூட்டன் சொல்வது போல, “நான் என்னவாக இருக்க வேண்டுமோ அப்படி இல்லை,
நான் என்னவாக இருக்க விரும்புகிறேனோ அப்படியுமில்லை,
நான் மறுமையில் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ அப்படியுமில்லை,
ஆனால், நான் முன்பு இருந்தது போல இப்போது இல்லை,
நான் இருப்பது கடவுளுடைய கிருபையால்.” என்று அவனால் சொல்லமுடியும்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

நான்காவதாக, யோவான் சொல்கிறார், “நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்.” – 1 யோவான் 3:14

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன் கிறிஸ்துவின் சீஷர்களுக்கென்று தனி பாசமுடையவனாக காணப்படுவான். பரலோகத்தில் இருக்கும் அவனுடைய பிதாவைப்போல, அவன் எல்லா மனிதர்களிடத்திலும் பொதுவான அன்பைக் காட்டுவான், இருப்பினும் அவனோடு ஒருமனப்படுகிற கடவுளுடைய பிள்ளைகள் மேல் தனி பாசம் உடையவனாக காணப்படுவான். அவனுடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவைப் போல மோசமான பாவிகளையும் நேசிப்பான், அவர்களுக்காக கண்ணீர் வடிப்பான்; இருப்பினும் விசுவாசிகள் மீது அவன் அசாதாரனமான அன்பைக் கொண்டிருப்பான். அவன் அவர்களுடைய ஐக்கியத்தில் இருப்பதுபோன்ற உணர்வை அவனுடைய வீடு அவனுக்கு கொடுக்காது. அவன் பூமியின் தலைசிறந்தவர்கள் மத்தியில் இருந்தாலும் பரிசுத்தான்களோடு இருப்பது போன்ற மகிழ்ச்சியை உலகத்தாரிடம் காணான். மற்ற்றோர், தாங்கள் தேர்ந்தெடுக்கும் சமூதாயத்தின் கல்வி, புத்தி, இணக்கம், பதவி ஆகியவற்றின் மூலம் அவர்களை மதிப்பார்கள். ஆனால், புதுப்பிக்கப்பட்ட மனிதன் கிருபையையே அளவுகோளாக வைத்திருப்பான். அதிக கிருபை பொருந்திய, கிறிஸ்துவைப் போலவே இருப்பவர்களை அவன் அதிகமாக நேசிப்பான். அவன் அவர்களை தன் சொந்த குடும்ப உருப்பினர்களாகவே பாவிப்பான். அவன் அவர்களை ஒரே எதிரிக்கு எதிராக யுத்தம்செய்யும் தன் சக போர்வீரர்களாக பாவிப்பான். அவன் அவர்களை ஒரே சாலைவழியாக ஒரே இடத்திற்கு பயனிக்கும் அக பயனிகளாக பாவிப்பான். அவன் அவர்களை புரிந்துகொள்வான், அவனை அவர்கள் புரிந்துகொள்வார்கள். பதவியிலும், ஸ்தானத்திலும், செல்வத்திலும் அவனுக்கும் அவர்களுக்கும் பெருத்த வித்தியாசம் காணப்பட்டாளும், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ஜனங்கள் என்பதே முக்கியம். அவர்கள் அவனுடைய பிதாவின் குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறார்கள். அவனால் அவர்களை நேசிக்காமல் இருக்க முடியாது.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

ஐந்தாவதாக, யோவான் சொல்கிறார், “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்” – 1 யோவான் 5:4

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன், உலகின் கருத்தியலை அவனது சரி மற்றும் தவறின் அளவீடாக வைக்க மாட்டான். தான் உலகின் நீரோட்டத்திற்கு எதிராக செல்வதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். உலகின் வழி, கருத்து மற்றும் பழக்கவழக்கங்களை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவான். “அடுத்தவன் என்ன சொல்லுவான்?” என்பது பற்றி அவன் யோசிக்க மாட்டான். மற்றவர்களின் கருத்துகள் அவனை திசைதுருப்பாதபடி பார்த்துக்கொள்ளுவான். உலகத்தின் இச்சையை ஜெயிக்கிறவனாக காணப்படுவான். அவனை சுற்றியுள்ள அநேகர் சந்தொஷம் என கொண்டாடும் காரியங்களில் அவன் மகிழ்ச்சியடையான். அவனால் அவற்றின் இன்பங்களை அனுபவிக்க முடியாது; அது அவனை சோர்வடையச் செய்யும்: அது அவனுக்கு வீனாகவும், பயனற்றதாகவும், அழியாத மனிதனுக்குத் தகுதியற்றதாகவும் தோன்றும். உலகின் பயத்தை ஜெயிக்கிறான். அவனை சுற்றி இருப்பவர்கள் தேவனியற்றது என் கூறினாலும் அதை செய்வதில் திருப்தியடைகிறான். அவர்கள் அவனை குற்றம் சாட்டுகிறார்கள்: அது அவனை அசைக்கவில்லை. அவர்கள் அவனை கேலி செய்கிறார்கள்: அவன் அவர்களுக்கு இடமளிக்கவில்லை. அவன் மனிதனின் துதியைவிட தேவனின் துதியை விரும்புகிறான். அவன் மனிதனை அவமதிப்பதைவிட தேவனை அவமதிப்பதைக் குறித்து பயப்படுகிறான். அவனுக்கு அதின் விலை தெரியும். அவன் மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்படுவதையும் பாராட்டப்படுவதையும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. நடப்பு வழக்கு மற்றும் பழக்கவழக்கங்களுக்கு அவன் இனி அடிமை அல்ல. உலகத்தை மகிழ்விப்பது என்பது எப்போதும் அவனுக்கு இரண்டாம் பட்சமே. கடவுளைப் பிரியப்படுத்துவதே அவன் பிரதான நோக்கம்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

ஆறாவதாக, யோவான் சொல்லுகிறார், “தேவனால் பிறந்தவன் எவனும் தன்னைக் காக்கிறான்.” – 1 யோவான் 5:18

ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் (அ) புதுப்பிக்கப்பட்ட மனிதன் அவனது சொந்த ஆன்மாவைக்குறித்து மிகவும் கரிசனையுள்ளவனாக இருக்கிறான். அவன் பாவத்தை மாத்திரம் அல்ல, அதற்கு வழிநடத்தும் எதையும் விட்டுவிட முயற்ச்சிக்கிறான். அவன் யாரோடு சகவாசம் வைக்கிறான் என்பதில் கவனத்தோடு இருக்கிறான். ஆகாத சம்பாஷனைகள் இருதயத்தைக் கெடுக்கும் என்பதை அறிந்தவன். ஒரு ஆரோக்கியமான மனிதனை தொற்று நோய் பிடிப்பது போல, பாவம் எவ்வலவு கொடிய தொற்றாக இருக்கிறது என்ற வீரியத்தை உணர்ந்தவனாக இருப்பான். அவன் நேரத்தை சரியாக இலாபகரமாக செலவிடுவதில் கவணம் செலுத்துகிறான்.  அவன் உருவாகும் நன்பர்கள் வட்டாரத்தைக் குறித்து கவனம் உள்ளவனாக இருக்கிறான்: அவன் நன்பர்கள் நல்லவர்களாகவும், நேசிக்கத்தக்கவர்களாகவும் நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் இருப்பதைத் தாண்டி அவனது ஆத்துமாவிற்கு நன்மையாக காணப்படுவார்களா என்பதை யோசிக்கிறான். அவனது அன்றாட பழக்கவலக்கங்களைக் க்குறித்து கவணம் உள்ளவனாக இருக்கிறான்: அவன் சொந்த இருதயம் எவ்வளவு வஞ்சனையுள்ளது என்பதையும், உலகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையும், மற்றும் பிசாசு அவனை வீழ்த்த அயராது பாடுபடுகிறான் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுவான். ஆகவே, அவன் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பான். அவன் அந்நிய நாட்டில் இருக்கும்  ராணுவ வீரனைப்போல தனது கவசங்களை எப்போதும் அனிந்தவனாக சோதனையை எதிர்கொள்ள ஆயத்தமுள்ளவனாக இருக்க விரும்புவான். அவன் எப்போதும் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறான் என்பதை தன் அனுபவங்கள் மூலம் நன்கு உணர்ந்தவன். விளிப்போடும், தாழ்மையோடும், ஜெபத்தால் நிறைந்தும் இருப்பதைக் கற்றுக்கொள்ளுகிறான்.

இந்த அடையாளத்தை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

இவைகளே ஒருவன் மறுபடியும் பிறந்திருக்கிறான் என்பதற்கான அறிகுறிகள். என்னுடன் இதுவரை வாசித்துவந்த ஒவ்வொருவரும், இவைகளை கவணத்தோடு மறுபடியும் படித்து இருதயத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.

இந்த அறிகுறிகள் ஒவ்வொரு நபர்களில் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படும் என்பது எனக்கு தெரியும். சில நபர்களில் இவை மயக்கமாக, மங்களாக, பலவீனமாக, கண்டுபிடிக்க முடியாத நிலையில் கூட காணப்படும். மற்ற சிலரில் இவை துணிவாக, கூர்மையாக, தெளிவாக, தவறின்றி காணப்படும்: அவற்றை யாரும் கண்டு பிடிக்கலாம். இந்த அறிகுறிகள் ஒருசில சிலரில் தெளிவாக பார்க்ககூடியதாக இருக்கும்; மற்றசில மற்றவர்களில் தெளிவாக பார்க்ககூடியதாகவும் இருக்கும். ஒரே ஆன்மாவில் இவ்வனைத்து அறிகுறிகளும் ஒரே அளவுகோளில் வெளிப்படுவது மிக மிக அரிது. நான் இவையெல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளுகிறேன்.

இங்கே மறுபடியும் பிறந்த மனிதனில் காணப்படும் ஆறு அறிகுறிகள் படமாக்கப் பட்டுள்ளது. கிறிஸ்துவின் சபைக்கு அப்போஸ்தலரால் எழுதப்பட்ட இந்த பொதுவான நிரூபத்தில் ஒரு மறுபடியும் பிறந்த மனிதன் பாவம் செய்யான் என்றும், இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிப்பான் என்றும், நீதியை செய்கிறான் என்றும், சகோதரரை நேசிக்கிறான் என்றும், உலகத்தை ஜெயிக்கிறான் என்றும், தன்னைக் காத்துக்கொள்ளுகிறான் என்றும் பார்த்தோம். வாசகர்கள் இவைகளையெல்லாம் கவணத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

இப்போது இந்த விஷயங்களைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? மறுபிறப்பு திருச்சபையின் சலூகைகளுக்காக மட்டும் என்று நினைப்பவர்களைக் குறித்து என்ன சொல்வது? நான் தைரியமாக சொல்வேன். நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். மறுபிறப்பின் இந்த  ஆறு அரிகுறிகள் ஒருவரில் காணப்பட்டால் அவர் மறுபடியும் பிறந்தவர்; காணப்படாவிட்டால் அவர் மறுபடியும் பிறக்காதவர். இந்த முடிவுக்கே நாம் வர வேண்டும் என்று அப்போஸ்தலர் யோவான் விரும்பியிருப்பார்.

வாசகனே, இந்த அரிகுறிகள் உன்னில் காணப்படுகிறதா? நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா?

Read More
01 Aug
0

நீதிமான் என்ன செய்வான் ?

சங்கீதம் 1:2

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” 

1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து:

சங்கீதம் முழுவதிலும், கர்த்தருடைய வேதம் என்ற பதம் கடவுளுடைய வார்த்தை அடங்கிய முழு வேதத்தைக் குறிக்கிறது. “கர்த்தருடைய வேதம்” என்பது பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து நூல்களுல் குறுகிவிடவில்லை. நீதிமான் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருக்கிறான்.

அ) உன்னை எது மகிழ்விக்கிறது? உன்னை எது உற்சாகப் படுத்துகிறது? உனக்கு எது முக்கியம் என்பதை கண்டுபிடிக்க இது ஒரு நல்ல வழி. சில மனிதர்களுக்கு, தனிப்பட்ட இன்பம் தான் அவர்களை மகிழ்விக்கும் காரியமாக இருக்கும். மற்ற சிலருக்கு, குடும்பத்தோடு இருப்பதும், நண்பர்களோடு இருப்பதும் பிரியமாக இருக்கும். ஆனால் நீதிமானோ, அவனுடைய ஆசை கர்த்தருடைய வேதத்தில் இருப்பதை கண்டுபிடிக்கிறான்.

ஆ) “மனிதனுக்கு நிச்சயம் சில ஆசைகள், சில உயர்வான ஆசைகள் இருக்கும். அவனுடைய இருதயம் ஒருபோதும் வெறுமையாக இருக்காது. சிறப்பான காரியங்களால் நிரப்பப்படாவிட்டால், அது தகுதியற்றதாலும் மற்றும் ஏமாற்றங்களாலும் நிரம்பும்.” (ஸ்பர்ஜன்). இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தைதான் மிகவும் சிறப்பானது.

இ) ஒரு மனிதன் எதிலாவது பிரியப்பட்டால், அதை செய்யும்படியோ அல்லது அதை விரும்பும்படியோ அவனுடைய செயல் காணப்படும், நீங்கள் அவனை வற்புறுத்த தேவை இல்லை. அவன் அவைகளையெல்லாம் தானாகவே செய்வான். தேவனுடைய வார்த்தையில் நீ எவ்வளவு பிரியமாக இருக்கிறாய் என்பதை நீ அதற்கு எவ்வளவு ஏங்குகிறாய் என்பதை வைத்து அளவிட்டு விடலாம்.

தேவனுடைய வார்த்தையில் நீ எவ்வளவு பிரியமாக இருக்கிறாய் என்பதை நீ அதற்கு எவ்வளவு ஏங்குகிறாய் என்பதை வைத்து அளவிட்டு விடலாம்.

2. இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிறான்:

நீதிமான் தேவனுடைய வார்த்தையை சிந்திக்கிறான். அவன் வெறுமனே அவைகளை கேட்டு மறந்துவிடுவதில்லை; அவன் அதை தியானிக்கிறான். கிறிஸ்தவன் என்பவன் தேவனுடைய வார்த்தையை தியானிக்க வேண்டும்.

அ) நவீன கால தியானங்களில், மனத்தை வெறுமையாக்குவதே இலக்காக இருக்கிறது. இது ஆபத்தானது. ஏனென்றால், வெறுமையான மனம் என்பது வஞ்சனைக்கும் அசுத்த ஆவிக்கும் திரந்த அழைப்பாக காணப்படும். ஆனால், கிறிஸ்தவ தியானத்தில், தேவனுடைய வார்த்தையால் உன் மனதை நிரப்புவதே இலக்கு. ஒவ்வொரு வார்த்தையையும் பதத்தையும் கவனமாக சிந்திப்பதின் மூலமாகவும், அதை அவன் வாழ்வில் அப்பியாசப்படுத்துதலின் மூலமும், அதை திரும்பி கர்த்தரிடம் ஜெபிப்பதின் மூலமும் இது சாத்தியப்படும்.

ஆ) “தியானம் என்பது கர்த்தருடைய வார்த்தையை அசை போட்டு அதன் இனிமையையும் போஷாக்கையும் இருதயத்திலும் வாழ்விலும் பெறுவது: இதுவே தெய்வபக்தியுள்ள மனிதன் கனிகொடுக்கும் வழி.” (ஸ்பர்ஜன்)

தியானம் என்பது கர்த்தருடைய வார்த்தையை அசை போட்டு அதன் இனிமையையும் போஷாக்கையும் இருதயத்திலும் வாழ்விலும் பெறுவது: இதுவே தெய்வபக்தியுள்ள மனிதன் கனிகொடுக்கும் வழி.

இ) அநேகரிடம் இருக்கும் குறைபாட்டிற்கு காரணம் அவர்கள் வாசிக்கிறார்களே தவிற தியானிப்பது இல்லை. “வாசிப்பது மாத்திரம் நமக்கு நன்மையைக் கொண்டுவருகிறதில்லை; ஆன்மா அதனால் போஷிக்கப்பட்டு அதை அசைப்போட வேண்டும். ஒரு பிரசங்கி ஒருமுறை தான் இருபதுமுறை வேதத்தை முழங்காளில் நின்றபடியே வாசித்ததாகவும் தெரிந்துகொள்ளுதல் என்ற போதனையை ஒருபோதும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் என்னிடம் கூறினார். அது நடக்காது. வாசிப்பதற்கு அது மிகவும் அசௌகரியமான நிலை. அவர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசித்திருந்தால் அவரால் ஒருவேலை புரிந்துகொள்ள முடிந்திருக்கும்.” (ஸ்பர்ஜன்)

{ஈ) இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தை தியானிப்பது என்பது, நீதிமான் நாள் முழுவதும் அவருடைய வார்த்தையினால் நிறைந்திருக்கிறான் என்பதை குறிக்கிறது.

Pastor Amresh Semurath

Read More