கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்
கேள்வி- 9
படைப்பின் கிரியை என்றால் என்ன?
பதில்
தேவன் தனது வார்த்தையின் வல்லமையினாலே ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் நல்லவைகளாக ஆறு நாளைக்குள்ளாகவேப் படைத்தார்.
வேத ஆதாரம்
ஆதியாகமம் 1:1
- ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
எபிரெயர் 11:3
- விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
யாத்திராகமம் 20:11
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.