கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்
கேள்வி-13
நம் ஆதிப்பெற்றோர் தாங்கள் படைக்கப்பட்ட நிலையிலேயே நிலைத்திருந்தார்களா?
பதில்:
நம் ஆதிப்பெற்றோர் தடைசெய்யப்பெற்ற பழத்தைப் புசித்து, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தங்களின் சுயாதீன சித்தத்தின்படி செயல்பட்டு, படைக்கப்பட்ட நிலையிலிருந்து வீழ்ந்து போனார்கள்.
வேத ஆதாரம்:
ஆதியாகமம் 3:6-8
- 6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
- 7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
- 8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய
கர்த்தருடைய
- சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய
கர்த்தருடைய
- சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
பிரசங்கி 7:29
- இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.