கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள்
கேள்வி- 3
வேதம் எதை அடிப்படையாகப் போதிக்கின்றது ?
பதில்
வேதம் அடிப்படையாக போதிப்பது என்னவென்றால், அது தேவனைக் குறித்தும்; மனிதன் எதை விசுவாசிக்க வேண்டும், எதை நம்ப வேண்டும் என்பதை குறித்தும்; தேவன் மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் கடமை என்னவென்பதைக் குறித்தும் போதிக்கின்றது.
வேத ஆதாரம்
2 தீமோத்தேயு 1:13
நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
பிரசங்கி 12:13
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.