கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்
கேள்வி- 19
முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா?
பதில்
தேவன் தனது நித்தியத்திலிருந்து தம்முடைய நல விருப்பத்தின்படியே, நித்திய வாழ்விற்கென்று சிலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்களுடைய பாவ அவல நிலையிலிருந்து விடுவித்து, இரட்சகரின் மூலமாக அவர்களை இரட்சிப்பின் நிலைக்குள் கொண்டு வந்து, அவர்களோடு கிருபையின் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.
வேத ஆதாரம்
1) 2 தெசலோனிக்கேயர் 2:13 (பின்பகுதி)
- “ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.”
2) ரோமர் 5:21
- “ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.”