கேள்வி பதில் வழியாக வேத சத்தியங்கள்

கேள்வி 2

நாம் தேவனை மகிமைப்படுத்தி அவரில் களிகூற தேவன் நமக்கு காட்டுகிற நியதி என்ன?

பதில்

பழைய, புதிய ஏற்பாடுகளில் அடங்கியுள்ள கர்த்தரின் வார்த்தைகள் வசனங்களாக உள்ளன. அவை மட்டுமே நம்மை அவரில் வழிநடத்தி அவரை மகிமைப்படுத்தி அவரில் களிகூற நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நியமங்களாகும்.

வேத ஆதாரம்

எபேசியர் 2:20

அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

 

2தீமோத்தேயு 3:16-17

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

 

1 யோவான் 1:3

நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.