கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்
கேள்வி- 21
தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து எப்படி மனிதனானார்?
பதில்
தேவனுடைய குமாரனாயிருந்த கிறிஸ்து, பாவமில்லாதவராய், கன்னி மரியாளின் வயிற்றிலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உற்பவிக்கப்பட்டு, உண்மையான சரிரம் மற்றும் ஆன்மாவைத் தமக்குள்ளே பெற்றவராய் மனிதனானார்.
வேத ஆதாரம்
1) எபிரெயர் 2: 14
- “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்.”
2) மத்தேயு 26:38
- “அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.”
3) எபிரெயர் 4:15
- ” நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”
4) லூக்கா 1:31
- “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.”
5) லூக்கா 1:35
- “தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”
6) எபிரெயர் 7:26
- “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.”
No Comments