கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்
கேள்வி- 15
ஆதாமின் முதல் மீறுதலினால் முழு மனுக்குலமும் வீழ்ந்து போயிற்றா?
பதில்
தேவன் ஆதாமோடும், அவனுக்கு பின்வரும் சந்ததியோடும், அவனுடைய வழித்தொன்றலோடும் தமது உடன்படிக்கையை ஏற்படுத்தினார். முதல் மீறுதலினாலே அவனுக்குள்ளாக அனைவரும் மீறுதலுக்குட்பட்டு வீழ்ந்து போனார்கள்.
வேத ஆதாரம்
1 கொரிந்தியர் 15:22
- ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
ரோமர் 5:12
- இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.