கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 12

தேவன் மனிதனை அவர் நிலையில் படைத்த போது, அவரின் சிறப்பான பராமரிப்பின் செயல் என்ன?

பதில்:

தேவன் மனிதனை படைத்த வேளையில் மரணத்தின் வேதனையைத் தருகிற நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க தடை செய்து, அதை பூரணமாக கைக்கொள்ளும்படியான நிபந்தனையின் அடிப்படையில் தேவன் அவனோடு ஜீவனுக்கேதுவான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். 

வேத ஆதாரம்:

கலாத்தியர் 3:12 

    நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

ஆதியாகமம் 2:17

    ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.