Blog

24 Nov
0

Spurgeon’s Catechism – தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 20

தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்?

பதில்

தேவனுடைய குமாரனாயிருந்தவரும், மனிதனாக இருந்தவரும் தொடர்ந்து இவ்விரண்டு நிலையில் இருக்கிறவரும், ஒருவராய், என்றென்றுமாய் இருக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனால் தெரிந்து கொண்டவர்களின் ஒரே மீட்பர்.

வேத ஆதாரம்

1)  1 தீமோத்தேயு 2: 5

  1. “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.”

2)  யோவான் 1:14 

  1. “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.”

3)  1 தீமோத்தேயு 3:16 (பின்பகுதி)

  1. ” தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.”

4)  கொலோசெயர் 2:9

  1. “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.”

Read More
23 Nov
0

Spurgeon’s Catechism – முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 19

முழு மனுக்குலத்தையும் தேவன் பாவத்திலேயும் துயரத்திலும் அழியும்படி விட்டுவிட்டாரா?

பதில்

தேவன் தனது நித்தியத்திலிருந்து தம்முடைய நல விருப்பத்தின்படியே, நித்திய வாழ்விற்கென்று சிலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்களுடைய பாவ அவல நிலையிலிருந்து விடுவித்து, இரட்சகரின் மூலமாக அவர்களை இரட்சிப்பின் நிலைக்குள் கொண்டு வந்து, அவர்களோடு கிருபையின் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

வேத ஆதாரம்

1)  2 தெசலோனிக்கேயர் 2:13 (பின்பகுதி)

  1. “ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.”

 

2)  ரோமர் 5:21 

  1. “ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.”

Read More
17 Nov
0

Spurgeon’s Catechism – வீழ்ச்சியின் விளைவாக மனிதன் அடைந்த அவநிலை என்ன?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 18

வீழ்ச்சியின் விளைவாக மனிதன் அடைந்த அவநிலை என்ன?

பதில்

வீழ்ச்சியின் விளைவாக, முழு மனுக்குலமும் தேவனுடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் கீழாகி, வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் மரணத்திற்கும் என்றென்றுமாய் நரக வேதனைக்கும் உட்பட்டது, தேவனோடிருந்த ஐக்கியத்தையும் இழந்து போனது.

வேத ஆதாரம்

1) ஆதியாகமம் 3:8 (பின்பகுதி)

  1. “தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.”

      ஆதியாகமம் 3:24 (முன்பகுதி)

  1. “அவர் மனுஷனைத் துரத்திவிட்டார்.”

2)  எபேசியர் 2:3

  1. “சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.”

3)  கலாத்தியர் 3:10  

  1. “நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.”

4)  ரோமர் 6:23 (முன்பகுதி)

  1. “பாவத்தின் சம்பளம் மரணம்.”

5)  மத்தேயு 25:41

  1. “அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.”

Read More
16 Nov
0

Spurgeon’s Catechism – மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா?

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 17

மனிதன் வீழ்ச்சியுற்றபோது பாவ நிலையைக் கொண்டிருந்தானா?

பதில்

மனிதன் வீழ்ச்சியுற்ற  போது, ஆதாமுடைய முதல் பாவமாகிய குற்ற உணர்வும், ஆதியில் கொண்டிருந்த நீதி இல்லாமையும், பொதுவான மூலப் பாவம் என்றழைக்கப்படுகிறது. மனித சுபாவம் முழுவதும் கறை படிந்திருக்கிற பாவநிலையைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தே எல்லா மீருதல்களும் புறப்படுகிறது. 

வேத ஆதாரம்

1)  ரோமர் 3:10 

    1.  “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை”.

2)  ரோமர் 5:19

  1. “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல,                        ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்”.

3)  எபேசியர் 2:1

  1. ” அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்”.

4)  சங்கீதம் 51:5

  1. “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”.

5)  மத்தேயு 15:19

  1. “எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்”.

 

Read More