Blog

09 Jan
0

Spurgeon’s Catechism – கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 15

ஆதாமின் முதல் மீறுதலினால் முழு மனுக்குலமும் வீழ்ந்து போயிற்றா?

பதில்

தேவன் ஆதாமோடும், அவனுக்கு பின்வரும் சந்ததியோடும், அவனுடைய வழித்தொன்றலோடும் தமது உடன்படிக்கையை ஏற்படுத்தினார். முதல் மீறுதலினாலே அவனுக்குள்ளாக அனைவரும் மீறுதலுக்குட்பட்டு வீழ்ந்து போனார்கள். 

வேத ஆதாரம்

1 கொரிந்தியர் 15:22

    ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

ரோமர் 5:12 

     இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

 

Read More
03 Jan
0

Spurgeon’s Catechism – கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 14

பாவம் என்றால் என்ன?

பதில்:

தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம்

வேத ஆதாரம் 

1யோவான் 3:4- நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

Read More
31 Dec
0

Spurgeon’s Catechism- கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி-13

நம் ஆதிப்பெற்றோர் தாங்கள் படைக்கப்பட்ட நிலையிலேயே நிலைத்திருந்தார்களா?

பதில்:

நம் ஆதிப்பெற்றோர் தடைசெய்யப்பெற்ற பழத்தைப் புசித்து, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தங்களின் சுயாதீன சித்தத்தின்படி செயல்பட்டு, படைக்கப்பட்ட நிலையிலிருந்து வீழ்ந்து போனார்கள். 

வேத ஆதாரம்:

ஆதியாகமம் 3:6-8

    1. 6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
    1. 7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
      1. 8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய

    கர்த்தருடைய

      1. சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய

    கர்த்தருடைய

       சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

பிரசங்கி 7:29

    இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.

 

Read More
30 Dec
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 12

தேவன் மனிதனை அவர் நிலையில் படைத்த போது, அவரின் சிறப்பான பராமரிப்பின் செயல் என்ன?

பதில்:

தேவன் மனிதனை படைத்த வேளையில் மரணத்தின் வேதனையைத் தருகிற நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க தடை செய்து, அதை பூரணமாக கைக்கொள்ளும்படியான நிபந்தனையின் அடிப்படையில் தேவன் அவனோடு ஜீவனுக்கேதுவான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். 

வேத ஆதாரம்:

கலாத்தியர் 3:12 

    நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

ஆதியாகமம் 2:17

    ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

 

Read More
456912